14-Member Group Talks with Transport Workers

போக்குவரத்து தொழிலாளர்களுடன் 14 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தை

Transport Workers

தமிழக தொழிற்சங்க ஊழியர்கள் ஊதிய உயர்வு, அகவிலைப்படி நிலுவை, கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 Transport Workers

அரசு அதிகாரிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்ற நிலையில் நேற்று மாலை சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் நடந்த 3-ம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து, போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களுடன் மீண்டும் பிப்ரவரி 21-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 15-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை நடத்தக் குழு ஒன்றை அமைத்து தமிழக அரசின் போக்குவரத்துத் துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டு உள்ளார். தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் நிதித்துறை கூடுதல் செயலாளர், போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் உள்ளிட்டர் 14 பேர் இடம் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *