5 Layers of Security At the Chennai Airport Ahead of the 75th Republic Day

75 – வது குடியரசு தினம் முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

5 Layers of Security

இந்தியாவின் 75 – வது குடியரசு தின விழா வரும் ஜனவரி மாதம் 26-ம் தேதி கொண்டாடப் படும் நிலையில் கொண்டாட்டங்களை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது தொடர்பாக குடியரசு தினத்தையொட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை (5 Layers of Security) அமல்படுத்தப் பட்டுள்ளது. இதனால் பயணிகள் முன்கூட்டியே விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

5-Layers-of-Security

இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள், முக்கிய ரயில் நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான பேருந்து நிலையங்கள், மார்க்கெட்டுகள் போன்ற இடங்களில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு முதல் 5 அடுக்கு பாதுகாப்பு முறை தொடங்கி வரும் 30-ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும். வரும் 24, 25, 26 ஆகிய 3 நாட்கள் உச்சக்கட்ட பாதுகாப்பாக 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப் படஉள்ளது.

திவீர சோதனை

  • விமான நிலையத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் நீண்ட நேரமாக நிற்கும் கார்கள், பைக்குகள் போன்ற வாகனங்களை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின், அதிரடி வீரர்கள் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் திவீரமாக சோதனையிட்டு விசாரிக்கின்றனர்.
  • அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து வரும் நிலையில் பார்வையாளர்கள் வருகைக்கான தடை  5 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அமலில் இருப்பதால்,  மேலும் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது.
  • விமானங்களுக்கு சிசிடிவி கேமராக்களை அமைத்து விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கவும்,
  • பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் மேலும் ஒரு முறை விமானங்களுக்கு உள்ளே செல்லும் இடத்தில் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
  • சென்னை விமான நிலையம் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாலும், விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுகிறது.
  • உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்படும் நேரத்துக்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சர்வதேச பயணிகள் மூன்றரைமணி நேரத்துக்கு
    முன்னதாகவும் வருமாறு சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *