Aavin Management Director Program to Increase Sales of Aavin Products

ஆவின் பொருட்கள் விற்பனையை அதிகரிக்க ஆவின் மேலாண்மை இயக்குநர் திட்டம்

Aavin

ஆவின் பால் (Aavin)பொருட்கள் விற்பனையை 20 % வரை அதிகரிக்க ஆவின் மேலாண்மை இயக்குநர் வினீத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Aavin-products

தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பால் பொருட்கள் விற்பனை வாயிலாக மாதந்தோறும் ரூ.45 கோடி வரை ஆவினுக்கு வருவாய் கிடைத்து வரும் நிலையில் தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில், ஆவின் பால் பொருட்கள் விற்பனையை 20 % வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோடைகாலத்தில் ஆவின் ஐஸ் கிரீம்க்கு தேவை அதிக அளவில் இருக்கும் நிலையில்  தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தமிழகத்தில் சென்னை அம்பத்தூர், சேலம், மதுரையில் ஐஸ் கிரீம் தயாரிப்பு ஆலைகளில் இங்கு ஐஸ் கிரீம், குல்பி ஐஸ், மோர் உள்ளிட்ட பால் பொருட்களை அதிக அளவு தயாரிக்க நடவடிக்கை எடுத்து உள்ளோம். ஐஸ் கிரீம் வைக்கும் குளிரூட்டும் சாதனங்களை தயார் செய்ய உள்ளோம். இந்த ஆண்டு கோடை காலத்தில் ஆவின் மோர் விற்பனையை 20 % வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என ஆவின் மேலாண்மை இயக்குநர் வினீத்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *