About Ariyalur

About Ariyalur: History, Population, Tourist places,  Handloom garments,  Temples, Airport, Metro Station, Map and List of Districts in Tamil Nadu, India

அரியலூர் (Ariyalur) மாவட்டத்திற்கு தொன்மையான மற்றும் புகழ்வாய்ந்த வரலாறு ஒன்று உள்ளது. இதன் காலங்கள் 2 இலட்ச வருடங்களுக்கும் முன்னுள்ள வரலாற்றுக்கு முந்தைய நாகரீகத்திற்குக் கொண்டு செல்கிறது. மனித இனம் தோன்றுவதற்கு முன், இந்நிலம், கடலுக்கு அடியில் மூழ்கியிருந்தது. பின் காலநிலை மாற்றங்களால், கடல்நீர் கிழக்கு நோக்கி நகர்ந்து ஜெனிஸ் (gneiss) குடும்பத்தைச் சார்ந்த உருமாறிய பாறைகளால் ஆன தற்போதைய நிலம் வெளிப்பட்டது.

Hand loom Ariyalur

இந்த பாறை வகைகள் வண்டல் மற்றும் ஜிப்சம் பாறைகளால் வெவ்வேறு புவியியல் காலகட்டங்களில் உருவானவை. 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட இம்மாற்றங்களின் காலத்தை புவியியலாளர்கள் ‘கிரிட்டாசியஸ்’ காலம் என குறிப்பிடுகின்றனர்.  இம்மாவட்டம் ஒரு தொல்லுயிர் விலங்கியல் பூங்காவாகத் திகழ்வதுடன் ‘புவியியல் ஆராயச்சியாளர்களின் மெக்கா’ எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது. டைனோசர் முட்டைகள் கல்லங்குறிச்சி மற்றும் நிண்ணியூர் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

About Ariyalur Map

Ariyalur Map

About Ariyalur Districts, Sensex, Area (அரியலூர் மாவட்ட தலைமையகம், மக்கள் தொகை, பரப்பளவு)

மாவட்டம் தலைமையகம் மாநிலம்
அரியலூர் அரியலூர் தமிழ்நாடு
பரப்பளவு மொ ஊரகம் நகர்ப்புறம்
1940.00 ச.கி.மீ 1886.69 ச.கி.மீ 53.31 ச.கி.மீ
மக்கள்தொகை மொ ஆண்கள் பெண்கள்
754894 374703 380191

தொழில்கள் (About Ariyalur Industries)

ஏராளமான சுண்ணாம்புப் படிவுகள் காரணமாக, முக்கிய சிமெண்ட் தொழிற்சாலைகள் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளன. ஜெயங்கொண்டம் மற்றும் அருகிலுள்ள இடங்களில் பழுப்பு நிலக்கரி கிடைப்பது இயற்கை அன்னையின் கொடை. புவியியலாளர்கள், அகழ்வாராய்ச்சியின்போது கிடைக்கப்பெறும் புதைபடிமங்களை “தேசிய சொத்துக்கள்” என கருதுகின்றனர்.

Cement

கைத்தறி வட்டாரங்கள்

ஜெயங்கொண்டம் வட்டாரம் ஆண்டிமடம் வட்டாரம் செந்துறை வட்டாரம் தா.பழூர் வட்டாரம்
ஜெயங்கொண்டம், விளந்தை சிறுகளத்தூர் கோடாலிக்கருப்பூர்
தேவாமங்கலம் குவாகம் உஞ்சினி உதயநத்தம்.
சின்னவளையம் கொடுக்கூர் நல்லாம்பாளையம்
உட்கோட்டை, ராதாபுரம்
கங்கைகொண்டசோழபுரம், அகரம்,
படைநிலை இலையூர்
மேலணிக்குழி மருதூர்
செங்குந்தபுரம், வாரியங்காவல்.
கல்லாத்தூர்.

அரியலூர் திருத்தலங்கள்

திருமழப்பாடி

 • சங்க கால மழவர் பரம்பரையினரின் இராணுவ முகாமாக இருந்ததால், மழவர்பாடி என்று அழைக்கப்பட்டு பின்னர் திருமழப்பாடி என்றானது.
 • இந்த இடத்தில் உள்ள வைத்தியநாத சுவாமி என்று அழைக்கப்படும் சிவன் கோவிலானது தேவார நாயன்மார்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர்களால் வழிபாடு செய்யப்பட்டு, பாடல் பெற்ற இடமானது.

Thirumazhapadi Temple

காமரசவல்லி

<em><strong>Karaivetti Bird Sanctuary Ariyalur</strong></em>
 • இவ்வூரில் உள்ள வாலாம்பாள் அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் கோவில், சுந்தர சோழன் காலத்தில் கி.பி.962 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
 • இங்கு ரதி தவமிருந்து தன் கணவன் மன்மதனை மீட்டதால் இவ்வூர் காமரதிவல்லி என பெயர் பெற்றதாக உள்ளூர் மரபுவழிக் கதைகள் கூறுகின்றன.
 • இவ்வூரின் கிழக்குப்பகுதியில் அழகிய மணவாளம் என்னும் ஊர் உள்ளது. இது ரதியின் அழகிய கணவன் பெயரால் அழகியமணவாளம் (அழகிய கணவன் – மன்மதன்) என்று அழைக்கப்பட்டது.
 • ரதியின் ஒரு அழகான வெண்கல உருவச்சிலை இக்கோயிலில் பாதுகாக்கப்படுகிறது.

Govindaputhur Temple

 • கோவிந்தப்புத்தூர், உடையார்பாளையம் வட்டத்தில், கொள்ளிடம் ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது.
 • இந்த கிராமத்தில் உள்ள சிவன் கோவில் கங்க ஜகதீஸ்வரர் கோவில் என அழைக்கப்படுகிறது.
 • மகேந்திரவர்ம பல்லவன் காலத்திய, அப்பர் மற்றும் சம்பந்தர் ஆகியோர் தங்களது தேவார திரட்டுகளில் இக்கோவிலைப் பற்றிப் புகழ்ந்து பாடியுள்ளனர்.

விக்கிரமங்கலம்

 • முதலாம் இராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் இக்கிராமம் நிறுவப்பட்டு அவரது குடும்பப் பெயரால் விக்கிரமசோழபுரம் என அழைக்கப்பட்டது.
 • இந்த இடம் சோழ மன்னர்களின் துணை நகரமாக விளங்கியதாக விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன் மற்றும் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆகியோரின் காலத்திய கல்வெட்டுக்கள் கூறுகிறது.

கங்கைகொண்டசோழபுரம், கங்கைகொண்டசோழீச்சரர் கோவில்

 • முதலாம் இராஜராஜசோழன் ஆட்சியில் கட்டப்பட்ட கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள மிகப்பெரிய கங்கை கொண்ட சோழீச்சரர் கோவில் , அரியலூர் பகுதியில் மிகச்சிறந்த ஒன்றாகும்.
 • கி.பி 1023 இல், கங்கை சமவெளியை வெற்றி கொண்ட பின்னர் முதலாம் இராஜேந்திர சோழனால், கங்கைகொண்டசோழபுரம் எனும் நகரமும் கங்கைகொண்டசோழீச்சரம் எனும் சிவன் கோவிலும் சோழ கங்கம் எனும் ஏரியும் வெற்றியின் நினைவாக அமைக்கப்பட்டது.

கோதண்டராமசாமி கோவில்

 • கோதண்டராமசாமி கோவில் என்ற ஒரு விஷ்ணு கோவில் அரியலூரில் உள்ளது.
 • இக்கோவிலின் மூலவர் ஸ்ரீனிவாசப்பெருமாளாக இருந்தாலும், இது ராமன், லக்ஷ்மணன் மற்றும் சீதை ஆகியோர் கோவில் கொண்டுள்ளதால் கோதண்டராமசாமி கோவில் என்றே அழைக்கப்படுகிறது.

kodandaramaswamy temple ariyalur

ஏலாக்குறிச்சி

 • அடைக்கல மாதா ஏலாக்குறிச்சி, அரியலூர் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற இடங்களில் ஒன்றாகும்.
  இது ரோமன் கத்தோலிக்கர்களுக்கான ஒரு புனித வழிபாட்டு தலமாகும்.
 • இத்தாலியிலிருந்து அரியலூர் பகுதிக்கு வந்த வீரமாமுனிவர் என அழைக்கப்படும் கான்ஸ்டாண்டினோபிள் ஜோசப் பெஸ்கி கி.பி 1710 முதல் 1742 ஆண்டு வரையிலான காலங்களில் கிருத்துவ மதத்தைப் பரப்பினார். இங்குள்ள அடைக்கல மாதா ஆலயம் இவரால் கட்டப்பட்டது.

Elakurichi-Adaikala-Matha

சுற்றுலாத் தலங்கள் (Ariyalur)

கரையவெட்டி பறவைகள் சரணாலயம்

வேட்டக்குடி- கரையவெட்டி பறவைகள் சரணாலயம் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 பிரிவு 18(1) இன் படியும் அரசு ஆணை எண். 219, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, நாள் 10.06.1997 இன் படியும் கரையவெட்டி பறவைகள் சரணாலயம் 453.71 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்க அறிவிக்கப்பட்டது . இச்சரணாலயம் அடிப்படையில் ஒரு பாசன ஏரியாகும்.

Kariyavetti Bird Sanctuary

இந்த ஏரி, செப்டம்பர் மாதம் முதல் மேட்டூர் நீர்த்தேக்கத்திலிருந்து நீர் பெறுகின்றது. மேலும் அக்டோபர் முதல் ஜனவரி வரை வடகிழக்கு பருவக்காற்று மூலமும் கூடுதலாக நீரைப் பெறுகிறது. இச்சரணாலயம், புலம்பெயரும் நீர்ப்பறவைகளுக்கான, தமிழ்நாட்டிலுள்ள மிக முக்கியமான நன்னீர் ஏரிகளுள் ஒன்றாக விளங்குகிறது.

கங்கைகொண்ட சோழபுரம்

முதலாம் இராஜராஜசோழன் ஆட்சியில் கட்டப்பட்ட கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள மிகப்பெரிய கங்கைகொண்டசோழீச்சரர் கோவில் ,  பகுதியில் மிகச்சிறந்த ஒன்றாகும். கங்கை நதிகரையில் சோழர்களின் புலிக்கொடியை ஏற்றிய தமிழர்களுடைய வீரத்தின் நினைவுச்சின்னங்களாக இன்றும் விளங்குகின்றன.

சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராக 256 ஆண்டுகள் இருந்தது. அவர் இங்கு கட்டப்பட்ட பிரம்மாண்டமான கற்கோவில், இடைக்கால சோழர் காலத்திய அழகான சிற்பங்கள் நிறைந்த களஞ்சியமாகும். இந்த நகரம் ஒட்டக்கூத்தரின் மூவர் உலா, ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி ஆகிய இலக்கியங்களில் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது.

கைத்தறி ஆடைகள் (Ariyalur)

அரியலூர் மாவட்டத்தில், கைத்தறி ஆடைகள் மிகவும் தரமானவையாக தயாரிக்கப்படுகின்றன. இந்த தொழிலானது  கீழ்காணும் இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

Handloom garments

About Ariyalur Police Station (அரியலூர் காவல் நிலையங்கள்)

காவல் நிலையங்கள் தொலைபேசி
அனைத்து மகளிர் காவல் நிலையம், அரியலூர் 9498165631
அனைத்து மகளிர் காவல் நிலையம், ஜெயங்கொண்டம் 9498100725
காவல் நிலையம், அரியலூர் 9498159973
காவல் நிலையம், ஆண்டிமடம் 9498190986
காவல் நிலையம், இரும்பிளிகுறிச்சி 9498197738
காவல் நிலையம், உடையார்பாளையம் 9498159633
காவல் நிலையம், கயர்லாபாத் 9498112098
காவல் நிலையம், குவாகம் 8883105141
காவல் நிலையம், செந்துறை 9498159470

இரயில் நிலையம் (Ariyalur)

அரியலூர் தொடருந்து நிலையம் பெரம்பலூரின் முக்கிய சாலையில் அமைந்துள்ளது.  பெரம்பலூர் மாவட்டங்களுக்கான முக்கிய இரயில்வே நிலையமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு ஒரு  இரயில் நிலையமாக செயல்படுகிறது.

Ariyalur Railway Station

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் பட்டியல்

மேலும் தமிழக மாவட்டங்கள் பற்றி அறிய மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *