About Chengalpattu: History, Population, Tourist places, Airport

Table of Contents

Chengalpattu: History, Population, Tourist places, Airport, Metro Station and Police Station

எண்ணற்ற சுற்றுலா தலங்கள் மற்றும் ஆன்மிக தலங்களை தன்னகத்தே கொண்ட செங்கல்பட்டு மாவட்டம் (Chengalpattu) 29 நவம்பர் 2019 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. உள்ளாட்சி & ஊராட்சி நிர்வாகம், வருவாய் கோட்டம் என புதிய செங்கல்பட்டு மாவட்டத்தின் பகுதிகளாக உள்ளன.

செங்கல்பட்டு வரைபடம்

வரலாறு

செங்கல்பட்டு முன்பு விஜயநகர மன்னர்களின் தலைநகராக இருந்தது. பின்னர் 1565இல் நடந்த தாலிகோட்டா போரில், தக்காண சுல்தான்களால் தோற்கடிக்கப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட செங்கல்பட்டு கோட்டை, அதன் பக்கவாட்டில் உள்ள ஏரி ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தது.

1639 ஆம் ஆண்டில் ஒரு உள்ளூர் ஆளுநர் இந்த மன்னர்களுக்கு உட்பட்டு, ஒரு கடற்கரை நிலத்தை தற்போது இருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை இடத்தை, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கினார். இது மதராசு நகரின் முக்கிய இடமாக மாறியது. செங்கல்பட்டு 1751 இல் பிரெஞ்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்டு, 1752 ஆம் ஆண்டில் ராபர்ட் கிளைவ் என்பவரால் திரும்பப் பெறப்பட்டது.

இந்திய சுதந்திரம் அடைவதற்கு முன்பே செங்கல்பட்டு நகரத்தை தலைமை இடமாகக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டன. சுதந்திரம் அடைந்த பிறகு சென்னை மாகாணத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் நிர்வாக பிரிவு தலைமையகம் மட்டும் சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் செயல்பட்டது.

1967 ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா முதல் அமைச்சர் ஆனதும் சைதாப்பேட்டையில் இருந்த செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைமையிடத்தை காஞ்சிபுரத்துக்கு மாற்றினார். நிர்வாக நகரமாக காஞ்சிபுரமும், நீதி நகரமாக செங்கல்பட்டும் செயல்பட்டன.

1997 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை விமான நிலையம் வரை பரப்பளவில் மிக பெரிதாக இருந்ததால், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரித்து நிறுவப்பட்ட புதிய செங்கல்பட்டு மாவட்டத் துவக்க விழா 29 நவம்பர் 2019 அன்று செங்கல்பட்டில் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட கோட்டம், வட்டம், மக்கள்தொகை, பரப்பளவு

கோட்டம் வட்டம் மக்கள் தொகை பரப்பளவு
செங்கல்பட்டு
செங்கல்பட்டு 210306 149.46
திருக்கழுக்குன்றம் 238244 709.64
திருப்போரூர் 156427 395.92
தாம்பரம்
தாம்பரம் 464297 99.08
பல்லாவரம் 582783 40.16
வண்டலூர் 321003 175.14
மதுராந்தகம்
மதுராந்தகம் 333902 762.01
செய்யூர் 249282 613.55
மொத்தம் 2556244 2945

Chengalpattu Map

செங்கல்பட்டு மாவட்ட பதவி மற்றும் தொலைபேசி எண்

பதவி தொலைபேசி எண்
மாவட்ட ஆட்சியர் 044-27427412
மாவட்ட வருவாய் அலுவலர் 044-27427413
திட்ட இயக்குனர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை 044-71116862
மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) 044-27427412

தொழில் நகரம்

  • செங்கல்பட்டு பகுதியில் Ford Motors, Hyundai, Rane போன்ற முன்னனி கார் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருவதால் இதனை செங்கல்பட்டு மாவட்டத்தின் டெட்ராயிட் என்று அழைப்பது மிகையல்ல.
  • செங்கல்பட்டு நகரை ஒட்டியுள்ள மகிந்திரா வோல்டு சிட்டி ஒரு சிறப்பு பொருளாதார மண்டலமாக உள்ளது.
  • இது இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த தொழில் நகரமாகும்.
  • இன்போசிஸ், பி.எம்.டபிள்யூ, டி.டி.கே குழுமம், கேப்ஜெமினி, ரெனால்ட் நிஸ்ஸான், விப்ரோ, டெக் மகிந்திரா ,டி.வி.எஸ். குழுமம் போன்ற முன்னனி தொழில் நிறுவனங்கள் இம்மாவட்டத்தில் செயல்பட்டுவருகின்றன.
  • சுமார் 25,000 க்கும் அதிகமான பணியாளர்கள் இம்மண்டலத்தில் பணியாற்றி வருகின்றனர்.

உள்ளாட்சி & ஊராட்சி நிர்வாகங்கள்

மாநகராட்சிநகராட்சிகள்பேரூராட்சிகள்ஊராட்சி ஒன்றியங்கள்தாம்பரம் மாநகராட்சிசெங்கல்பட்டுதிருப்போரூர்காட்டாங்குளத்தூர் மறைமலைநகர்திருக்கழுகுன்றம்பரங்கிமலை மதுராந்தகம்அச்சரப்பாக்கம்திருப்போரூர் பம்மல்மாமல்லபுரம்திருக்கழுக்குன்றம்  அச்சிறுபாக்கம்சித்தாமூர்  இடைக்கழிநாடுலத்தூர்  கருங்குழிமதுராந்தகம்   அச்சரபாக்கம்

மாநகராட்சி நகராட்சிகள் பேரூராட்சிகள் ஊராட்சி ஒன்றியங்கள்
  • தாம்பரம் மாநகராட்சி
  • செங்கல்பட்டு
  • மறைமலைநகர்
  • மதுராந்தகம்
  • பம்மல்
  • திருப்போரூர்
  • திருக்கழுகுன்றம்
  • அச்சரப்பாக்கம்
  • மாமல்லபுரம்
  • அச்சிறுபாக்கம்
  • இடைக்கழிநாடு
  • கருங்குழி
  • காட்டாங்குளத்தூர்
  • பரங்கிமலை
  • திருப்போரூர்
  • திருக்கழுக்குன்றம்
  • சித்தாமூர்
  • லத்தூர்
  • மதுராந்தகம்
  • அச்சரபாக்கம்

செங்கல்பட்டு மாவட்டத்தின் சுற்றுலா இடங்கள்

திருவிடந்தை

சென்னை மற்றும் மாமல்லபுரத்திற்கும் இடையே கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் ஆகும். திருவிடந்தை கோயிலில் நித்திய கல்யாண பெருமாள் மூலவராக உள்ளார். மேலும் இங்குள்ள அழகிய வராக பெருமாளை திருமணமாகாதவர்கள் வழிபடுவதால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

Sri Nithya Kalyana Perumal Temple

சீனிவாச பெருமாள் கோயில் (செம்மஞ்சேரி)

ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலின் பிரதான நுழைவாயில் மற்றும் கருவறை (கர்ப-கிரஹா) கிழக்கு நோக்கி உள்ளது. கோயிலின் நுழைவாயிலில் 3 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் பலிபீடம், துவஜஸ்தம்பம் மற்றும் கருட சன்னிதி ஆகியவை உள்ளன. இந்த ஆலயம் திருமணமாகாதவர்கள் மற்றும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கான பிரார்த்தனை ஸ்தலமாகும். இந்தக் கோயிலுக்குச் சென்று மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்வதன் மூலம் இழந்த பார்வையை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.

Semmancheri Srinivasa Perumal Temple Entrance Gopuram

முதலை வங்கி

முதலை வங்கி, தமிழ்நாட்டின் கடலோர நகரமான மகாபலிபுரத்தில் உள்ள முதலைகள் மற்றும் பிற ஊர்வனவற்றிற்கான பாதுகாப்பு மையமாகும் . இது 1976 இல் ரோமுலஸ் விட்டேக்கர் என்பவரால் நிறுவப்பட்டது.
2,000க்கும் மேற்பட்ட முதலைகள் மற்றும் பிற ஊர்வனவற்றைக் கொண்டுள்ளது, இதில் பல வகையான அழிந்து வரும் மற்றும் ஆபத்தான முதலைகள், ஆமைகள், பாம்புகள் மற்றும் பல்லிகள் ஆகியவை அடங்கும். இந்த அறக்கட்டளை  ஊர்வனவற்றிற்கான ஒரு சரணாலயம் மற்றும் ஒரு பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் கல்வி மையமாகும்.

Crocodile Bank Trust

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா (வண்டலூர்)

வண்டலூர் பூங்கா 1976 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 1985 ஆம் ஆண்டு பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. 62 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு தெற்காசியாவிலேயே இப்பூங்கா முதன்மையானதாக திகழ்கிறது. இங்கு 40 வகையான பறவையினங்கள், 14 வகையான ஊர்வனவையும், விலங்கினங்கள் பாதுகாப்பதறக்கான அமைப்பும் செயல்படுகிறது. இங்கு விலங்கினங்கள் ஆராய்ச்சி மற்றும் விலங்கினங்கள் குறித்தான விழிப்புணர்வு போன்றவை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விளக்கப்படுகிறது.

Vandalur Annazoo

மாமல்லபுரம் (மஹாபலிபுரம்)

மாமல்லபுரம் பல்லவ வம்சத்தால் உருவாக்கப்பட்டதோடு அவர்கள் ஆட்சிக் காலத்தில் இது பல்லவ வம்சத்தின் துறைமுகமாக திகழ்ந்தது. நரசிம்ம வர்மன் மாமல்லன் என்ற பெயரில் ஒரு பெரிய மல்யுத்த வீரராக இருந்ததால் மாமல்லபுரம் என பெயரிடப்பட்டது. இது மிகவும் கவர்ச்சிகரமான கடற்கறை ஆகும். இங்கு ரதங்கள், மண்டபங்கள், மற்றும் குகை கோயில்கள் அமைந்துள்ளது. 100 அடி நீளம் கொண்ட அர்ஜீனா பீனான்ஸ் உள்ளது. இங்குள்ள சிவன் கோயிலில் எண்ணற்ற சிற்பங்கள் நிறைந்துள்ளது.

Mahabalipuram

முட்டுக்காடு படகு துறை

முட்டுக்காடு படகு துறை, முதலியார் குப்பம் படகு இல்லத்தில் பல வகையான படகு சவாரி- வாழைபழ படகு சவாரி, வாட்டர் ஸ்கூட்டர், விறைவு படகு சவாரி போன்றவை நடத்தப்படுகிறது. இதற்கு அருகாமையில் உள்ள ஒதியூர் ஏரியில் படகு சவரி நடத்தப்பட்டு வருகிறது. ஓடியூர் ஏரியின் கடற்கரை தீவுக்கு மோட்டார் படகுப் பயணங்களை ஏற்பாடு செய்கிறது.

Muttukadu Boat House Chennai

செங்கல்பட்டு காவல் நிலையம்

நகர காவல் நிலையம் 044-27424423, 100
தாலுக்கா காவல் நிலையம் 044-27424325
மகளிர் காவல் நிலையம் 044-27431441
தீயணைப்பு மற்றும் மீட்பு துறை 044-27431299, 101

 சாலை போக்குவரத்து

  • மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், செங்கல்பட்டு, கருங்குழி, மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம் மற்றும் தொழுப்பேடு ஆகிய நகரங்கள் வழியாகச் சென்னை நகரத்தை மாநிலத்தின் தெற்கில் உள்ள பகுதிகளுடன் இணைக்கிறது.
  • கிழக்கு கடற்கரை சாலையானது சென்னை கிழக்கு பகுதிகளின் வழியாக கோவளம், வடநெம்மெலி, மாமல்லபுரம், கல்பாக்கம், கூவத்தூர் மற்றும் கடப்பாக்கம் வழியாக சென்று புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் பிற கடற்கரை மாவட்டங்களை இணைக்கிறது.

Chengalpattu ரயில் போக்குவரத்து

  • செங்கல்பட்டு சந்திப்பு
  • திருமணி ரயில் நிலையம்
  • ஒட்டிவாக்கம்
  • பரனூர்

Chengalpattu வான்போக்குவத்து

  • சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்
  • கிரீன்ஃபீல்ட் விமான நிலையம்
  • நுங்கம்பாக்கம் விமான நிலையம்

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் பட்டியல்

மேலும் தமிழக மாவட்டங்கள் பற்றி அறிய மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *