About Nilgiri: History, Population, Tourist places, Street food, Airport, Metro Station and Police Station

Nilgiri: History, Population, Tourist places, Street food, Airport, Metro Station and Police Station

Nilgiri

உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களுள் ஒன்றான மேற்குத்தொடர்ச்சி மலைகளின் பகுதியான நீலகிரி ( Nilgiri) தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் முக்கியமான சந்திப்புப் புள்ளியாகும். “மலைகளின் அரசி” எனப்படும் உதகமண்டலம், இதன் தலைநகர் ஆகும்.

Nilgiris Tea Plantation

இங்குள்ள உயரமான மலைமுடி தொட்டபெட்டா ஆகும். குன்னூர், கோத்தகிரி, கூடலூர், அரவங்காடு ஆகியன இம்மாவட்டத்தில் உள்ள நகரங்கள் ஆகும். குன்னூர் (உதகையி்ல் இருந்து 19 கி.மீ. தொலைவு) மற்றும் கோத்தகிரி (உதகையி்ல் இருந்து 31 கி.மீ) ஆகியவை நீலகிரி மாவட்டத்தின் முக்கிய நகரங்களாகும்.

Kurinji

பசும்புல்வெளிகள், அடர்த்தியான சோலைகள், எழில்கொஞ்சும் அருவிகள், சிற்றோடைகள், ஏரிகள், பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள், அவற்றிற்கிடையே அமைந்துள்ள காய்கறித் தோட்டங்கள், கண்கவர் காட்சிமுனைகள், அரிதான தாவரங்கள், விலங்கினங்கள், அற்புதமான மலையேற்றப் பாதைகள், எண்ணிலடங்கா பாரம்பரிய இடங்கள், வியக்க வைக்கும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனக் காட்சிகள், பல்வேறு வண்ணங்களுடன் கூடிய வான்வெளிகள், மாசு இல்லாத சுற்றுச்சூழல், மூடுபனி, மேகக் கூட்டங்கள் ஆகியவற்றுடன் கூடிய நீலகிரி மாவட்டம் பார்பவர்களுக்கு விருந்தளிக்கக்கூடிய, மனதிற்கு இதமளிக்கக்கூடிய இடமாக உள்ளது.

Nilgiri District Collector Office

நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம், உயிர்க்கோள் காப்பகமாக நீலகிரி பகுதியை ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ (UNESCO) அறிவித்துள்ளமை நீலகிரிக்குப் பெருமை சேர்க்கிறது. இது இந்தியாவின் முதல் உயிர்க்கோள் காப்பகமாகும்.

வரலாறு

 • மலைகளும், மலை சார்ந்த இடங்களும் கொண்ட பழங்குடியினரின் வசிப்பிடம் நீலகிரி. நீலகிரி மலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த குறியீடு உலகம் முழுக்கவும் இருக்கின்ற பல தொன்மையான வரலாற்றுக்கு முந்தைய நாகரீகங்களும் எத்தியோபியாவில் ஆட்சி செய்த பேரரசி ஷோபாவைப் பற்றிய குறிப்புகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 • 10 ஆம் நூற்றாண்டிலிருந்து இப்பகுதிகளை கங்கர்கள், கடம்பர்கள், ஹொரளர்கள், நாயக்கர்கள், மைசூர் அரசர்கள், கேரளவர்மா முதலியோர் இப்பகுதிகளை ஆண்டதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.
 • ஹொரள மன்னன் தன்னாயகா நீலகிரி கொண்டான் என்ற சிறப்புப் பெயரோடு ஆண்டதாக கூறப்படுகிறது.
 • பதினோராம் மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டில் சிலப்பதிகாரத்தில் நீலகிரியை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
 • தென்னிந்தியாவில் அதாவது சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், ராஷ்டிரகூடர்கள், கங்கர்கள், பல்லவர்கள், கடம்பர்கள் காலத்தில் நீலகிரிக்கு ராஜாக்கள் வந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. விஷ்ணுவர்தனா காலத்தில் ராஜாக்கள் ‘நிலா மலைகள்’ என அழைத்துள்ளனர்.
 • 1336 முதல் 1565 வரை விஜயநகர பேரரசின் ஒரு பகுதியாக நீலகிரி இருந்துள்ளது. 1565 இல் அதன் வீழ்ச்சிக்கு பின்னர் மைசூர் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்கு நீலகிரி சென்றது. பின்னர் அது ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆட்சியின் கீழ் வந்தது.
 • ஒரு ஒப்பந்தம் மூலம் 1799ல் கிழக்கு இந்திய வணிகக் குழுவிற்கு விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த அழகான மலைப்பகுதி 1818 வரை ஆங்கிலேயரால் அறியப்படாமல் இருந்துள்ளது. இதன்பிறகு கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜான் சல்லிவன், நீலகிரியை உலகுக்கே அறிமுகம் செய்து வைத்தார்.
<em><strong>Longwood Shola Reserve Forest in Nilgiris</strong></em>

 Nilgiri Map

Direction: View Google Direction here.

மாவட்ட நிர்வாக  பதவி, பெயர், மக்கள் தொகை விவரங்கள்

பெயர் பதவி தொலைபேசி
திரு சா.ப. அம்ரித் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர் 0423-2442344
முனைவர் கி. பிரபாகர் காவல்துறை கண்காணிப்பாளர் 0423-2223839
திருமதி இரா. கீர்த்தி பிரியதர்சினி மாவட்ட வருவாய் அலுவலர் 0423-2441233
மரு எஸ். உமா மகேஸ்வரி திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை 0423-2442053
மக்கள் தொகை
மொத்த மக்கள் தொகை ஆண்கள் பெண்கள்
7,35,394 3,60,143 3,75,251

Nilgiri District Lambs rock

Nilgiri சுற்றுலாத் தலங்கள்

 • பழங்குடியினர் அருங்காட்சியகம்
 • லேம்ஸ் பாறை
 • டால்பின் நோஸ்
 • முதுமலை புலிகள் காப்பகம்
 • சிம்ஸ் பூங்கா
 • பைகாரா நதி மற்றும் நீர்வீழ்ச்சி
 • அவலாஞ்சி
 • கிளன்மார்கன்
 • உதகை ராஜ்பவன்
 • தொட்டபெட்டா
Avalanche

உதகை சுற்றுலா அலுவலர், தொலைபேசி

உதகை சுற்றுலா அலுவலர், தொலைபேசி
அலுவலகம்/அலுவலர் தொலைபேசி (0423)
சுற்றுலா அலுவலர் 2443977
TTDC, பழைய படகு இல்லம் 2446801
மேலாளர், இளைஞர் விடுதி, உதகை 2443665

காவல் நிலையம்

 • கே 1 காவல் நிலையம்
 • மானார் போலீஸ் செக்போஸ்ட்
 • வெலிங்டன் காவல் நிலையம்
 • புதிய நம்பிக்கை காவல் நிலையம்

கோடை திருவிழாக்கள்

கோடை விழா
நிகழ்வு பெயர் இடம் தேதி
காய்கறிகள் கண்காட்சி கோத்தகிரி மே 6 மற்றும் 7
வாசனை திரவிய கண்காட்சி கூடலூர் மே 12 முதல் 14 வரை
ரோஜா கண்காட்சி உதகை மே 13 முதல் 15 வரை
மலர் கண்காட்சி உதகை மே 19 முதல் 23 வரை
பழங்கள் கண்காட்சி குன்னூர் மே 27 மற்றும் 28

Nilgiri District Vegetable Show

உதகை பயண வழி:

வான்வழி Nilgiri District

 • கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து உதகை 105 கி.மீ. தொலைவில் உள்ளது.

இரயில் வழி Nilgiri

 • உதகமண்டலம்
 • ஃபெர்ன்ஹில் ரயில் நிலையம்
 • கெட்டி

சாலை வழி Nilgiri

உதகைக்கு சென்னை, மேட்டுப்பாளயம், பெங்களூரு, மைசூர் போன்ற இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 • மசக்கல் பேருந்து நிறுத்தம்
 • சின்னக்கோனூர் கிராம பேருந்து நிறுத்தம்
 • துனேரி பேருந்து நிறுத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *