Adani Group & Anand Mahindra Joint Venture “Charging Centers” Soon…

அதானி குழுமம் & ஆனந்த் மஹிந்திரா கூட்டு ஒப்பந்தத்தில் “சார்ஜிங் மையங்கள்” விரைவில்…

Charging Centers

நாடு முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்களை (Charging Centers) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் அதானி டோட்டல் எனர்ஜிஸ் ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

Charging Centers

எலெக்ட்ரிக் வாகனங்கள்

  • எலெக்ட்ரிக் வாகனங்கள் சாலைகளை ஆக்கிரமித்து வருகின்றன.
  • அதிகரித்து வரும் எரிபொருள் விலை உயர்வு, சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவை பெட்ரோலிய வாகனங்களுக்கு மாற்றான எலெக்ட்ரிக் வாகனங்களை வரவேற்று வருகின்றன.
  • அரசும் அதற்கான சலுகைகளை அறிவித்து வருவதால், வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனத் தேர்வில் எலெக்ட்ரிக் வாகனத்தை விரும்புகின்றனர்.
  • எலெக்ட்ரிக் வாகனங்களின் உபயோகத்தில், அதற்கான சார்ஜிங் நிலையங்கள் சவாலாக நீடிக்கின்றன.
  • எரிபொருள் நிலையங்கள் போல குறிப்பிட்ட கிமீ தொலைவுக்கு ஒன்றாக இ-சார்ஜிங் நிலையங்கள் இருப்பதில்லை.
  • ஆனந்த் மஹிந்திராவின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் அதானி குழுமத்தின் அதானி டோட்டல் எனர்ஜிஸ் துணை நிறுவனமான அதானி டோட்டல் எனர்ஜிஸ் இ-மொபிலிட்டி லிமிடெட் ஆகிய இணைப்பின் மூலம், மஹிந்திராவின் எக்ஸ்யூவி400 வாடிக்கையாளர்கள் தங்களது ப்ளூசென்ஸ்+ செயலி மூலம் 1100-க்கும் மேற்பட்ட சார்ஜிங் நிலையங்களை எளிதில் அணுகலாம்.
  • மஹிந்திரா மட்டுமன்றி பிற எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் அணுகலையும் சாத்தியமாக்க வாய்ப்பு தந்துள்ளது.
  • நாட்டில் இ-சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இந்தக் கூட்டணி ஒரு மைல்கல் சாதனையை படைத்துள்ளதாகவும் மஹிந்திரா நிறுவனம் தெரிவிக்கிறது.
  • இந்தியாவில் இ-வாகன பயன்பாட்டினை இலகுவாக்குவதோடு, போட்டி நிறுவனங்கள் கூடுதல் சார்ஜிங் நிலையங்களை திறக்கவும் தூண்டியுள்ளது. கார்பன் உமிழ்வைக் குறைப்பதில் இந்தியா அதன் காலநிலை நடவடிக்கை இலக்குகளை அடைவதிலும் வாய்ப்பளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *