Aditya – L1: Reaches “Legrangian” Target on Jan 6 – ISRO Chief Somnath Announces!!

ஆதித்யா – L1: ஜனவரி 6 ல் “லெக்ராஞ்சியன்” இலக்கை அடையும் – இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு!!

Aditya – L1

இந்தியாவில் இருந்து சூரியனை ஆய்வு செய்ய ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து PSLVC -57 ராக்கெட் மூலம் விண்கலம், கடந்த செப்டம்பர் மாதம் 2-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தனது இணைதளத்தில் Aditya – L1 விண்கலம் சூட் (The Solar Ultraviolet Imaging Telescope – SUIT) தொலைநோக்கி மூலம் வெவ்வேறு அலை நீளங்களில் எடுக்கப்பட்ட சூரியனின் படங்களை கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஜனவரி 6 ல் இலக்கை அடையும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

Aditya-L1

பூமியில் இருந்து 125 நாட்கள் பயணம் செய்து, விண்கலம் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ சென்றடைந்து, சூரியனை ஆய்வு செய்யும் பணியில் விண்கலம் ஈடுபடும். விண்கலம் பூமியைச் சுற்றி வரும்போது 5 முறை சுற்றுப் பாதையின் அளவு உயர்த்தப்பட்டது. தற்போது பூமியின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து விண்கலம் விலகி வெற்றிகரமாக ‘லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத்

  • அகமதாபாத்தில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இஸ்ரோ தலைவர் சோம்நாத்,  அவர்கள் சென்று சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி 6-ம் தேதி அதன் இலக்கான லெக்ராஞ்சியன் நிலைப் புள்ளியை சென்றடையும் என தகவல் தெரிவித்துள்ளார்.
  • லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை அடைந்தவுடன் விண்கலம் அந்த இடத்திலேயே சுற்றி வந்து சூரியனில் ஏற்படும் நிகழ்வுகளை ஆய்வு செய்யும்.
  • அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆய்வு மேற்கொண்டு தகவல்களை பூமிக்கு அனுப்பும்.
  • இந்த தரவுகள் சூரியனின் இயக்கம் மற்றும் அது நம் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள  தரவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *