Admit Card for Khelo India Sports Tournament for Public – Tamil Nadu Sports Development Authority Notification

பொதுமக்களுக்கு கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அனுமதி சீட்டு – தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு

Admit Card for Khelo India Sports

2024 ஆம் ஆண்டு6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் , தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் வருகிற 19 முதல் 31 வரை நடைபெற உள்ளன. போட்டிக்கான அனுமதி சீட்டினை (Admit Card for Khelo India Sports) அலை பேசியிலோ அல்லது அச்சிடப்பட்ட தாளிலோ கொண்டு செல்ல வேண்டும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Admit-Card-for-Gallo-India-Sports

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள்

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 6000-க்கும் மேற்பட்ட
விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் 1600-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்கும்  போட்டியில் 1000-க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் 1200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ஸ்குவாஷ் அறிமுக விளையாட்டாக இடம் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் டெமோ விளையாட்டாக இடம் பெற உள்ள நிலையில் 2024 ஆம் ஆண்டு 27 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நேரில் பார்வையிட வசதியாக அனுமதி சீட்டுகளை வழங்க தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இப்போட்டியை நேரில் காண விரும்பும் பார்வையாளர்கள் TNSPORTS என்ற செயலியின் மூலமாகவும் மற்றும் https://www.sdat.tn.gov.in  என்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் மூலம் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

  • இணையதளத்தில் அனுமதி சீட்டை போட்டி நடைபெறும் மாவட்டம். விளையாட்டு மற்றும் தேதியை தேர்வு செய்து பதிவு செய்ய வேண்டும்.
  • பின்னர் தங்களது அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
  • நேரில் போட்டியை காண்பதற்கு செல்லும் போது பதிவிறக்கம் செய்த அனுமதி சீட்டினை அலை பேசியிலோ அல்லது அச்சிடப்பட்ட தாளிலோ கொண்டு செல்ல வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *