ADMK: Phase 2 list of Candidates Released

அதிமுக:  2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

ADMK

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் அ.தி.மு.க. வின் (ADMK) 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

ADMK

அதிமுக தனது கூட்டணியில் ஓரளவு தொகுதி பங்கீடை முடித்த நிலையில் தேமுதிகவுக்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சை, விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 16 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் அ.தி.மு.க 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.

இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்

  • கோவை – சிங்கை ராமச்சந்திரன்
  • திருச்சி – கருப்பையா
  • பெரம்பலூர் – சந்திரமோகன்
  • மயிலாடுதுறை – பாபு
  • ஸ்ரீபெரும்புதூர் – பிரேம் குமார்
  • தருமபுரி – அசோகன்
  • திருப்பூர் – அருணாசலம்
  • நீலகிரி – லோகேஷ்
  • வேலூர் – பசுபதி
  • திருவண்ணாமலை – கலியபெருமாள்
  • கள்ளக்குறிச்சி – குமரகுரு
  • சிவகங்கை – சேகர் தாஸ்
  • நெல்லை – சிம்லா முத்துச்சோழன்
  • தூத்துக்குடி – சிவசாமி வேலுமணி
  • கன்னியாகுமரி – பசிலியா நசரேத்
  • புதுச்சேரி – தமிழ்வேந்தன்
  • விளவங்கோடு இடைத்தேர்தல் – ராணி என 33 தொகுதிகளில் அ.தி.மு.க நேரடியாக போட்டியிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *