Agni 5 Missile Test Success After 10 Years of Effort – PM Praises Scientists

10 ஆண்டு முயற்சிக்கு பின் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி – விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு

Agni 5 Missile

அதிநவீன அக்னி 5 ஏவுகணையின் (Agni 5 Missile ) முதல் சோதனை வெற்றி பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் பல்வேறு இலக்குகளை தனித்தனியாக தாக்கும் திறன் வாய்ந்த அக்னி 5 ஏவுகணைக்காக டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Agni-5-Missile-Test-Success

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) 10 ஆண்டு முயற்சிக்குப் பிறகு மேம்படுத்தப்பட்ட அக்னி – 5 ஏவுகணையை திவ்யாஸ்திரம் என்ற திட்டத்தின் கீழ், மல்டிபில் இண்டிபென்டன்ட்லி டார்கெட்டபிள்ரீ-என்ட்ரி வெஹிகிள் (எம்ஐஆர்வி) தொழில்நுட்பத்தில் உள்நாட்டிலேயே இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை முதல் முறையாக பரிசோதிக்கப்பட்டு சோதனை வெற்றி பெற்றதாக டிஆர்டிஓ அறிவித்துள்ளது.

சோதனையின் மூலம், எம்ஐஆர்வி தொழில்நுட்ப ஏவுகணைகள் கொண்ட அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. அக்னி – 5 ஏவுகணை திட்டத்தின் இயக்குநர் ஒரு பெண் ஆவார். அத்துடன் இதில் பெண்கள் கணிசமான அளவில் பங்களித்துள்ளனர்.

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் இந்த ஏவுகணை விண்வெளியில் (வளி மண்டலத்துக்கு மேல்) செலுத்தப்படும். இது பின்னர் அங்கிருந்து மீண்டும் வளி மண்டலத்துக்குள் நுழைந்து வந்து தரையில் உள்ள பல்வேறு இலக்குகள் மீது தனித்தனியாகவும் துல்லியமாகவும் தாக்குதல் நடத்தும். இது 5 ஆயிரம் கி.மீ.க்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் வாய்ந்தது. திவ்யாஸ்திரம் திட்டத்தின் கீழ் எம்ஐஆர்வி தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள அக்னி – 5 ஏவுகணை முதல் சோதனை வெற்றி பெற்றதற்கு நமது டிஆர்டிஓ விஞ்ஞானிகளை நினைத்து பெருமைப்படுகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *