” எய்ம்ஸ் பணிகள் எப்போது தொடங்கும் எனத் தெரியாது” – சுகாதாரத் துறை பதில்

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தகவல் அறியும்
உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, தொடங்கப்படும் தேதி தெரியாது என்று சுகாதாரத் துறை பதிலளித்துள்ளது.

சமூக ஆர்வலர் சார்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் அடிப்படையில் கேட்கப்பட்ட
கேள்விக்கு திருத்தப்பட்ட இலக்கிற்கான நிறைவு தேதிக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை
என்றும் சுகாதாரத் துறை பதிலளித்துள்ளது.

திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது என்று பதிலளித்துள்ள
சுகாதாரத் துறை, விரிவான மதிப்பீடு பற்றிய தகவல்களும் இல்லை என்று விளக்கம்
அளித்துள்ளது.

எத்தனை கட்டங்களாக பணிகள் நடைபெறும் என்பது குறித்த கேள்விக்கு சுகாதாரத் துறை
பதிலளிக்கவில்லை . மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் மாணவர் சேர்க்கைக்கான முன்மொழிவு மாநில அரசின்பரிசீலனையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *