Alphabetical Voter List Sathyaprada Sahu Information

அகர வரிசைப்படி வாக்காளர் பட்டியல் சத்யபிரத சாஹு தகவல்

Alphabetical Voter List

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு  வாக்குச்சாவடி உதவி மையத்தில் அகர வரிசைப் படியான வாக்காளர் பட்டியல் வைக்கப்படுவதால், வாக்காளர்கள் தங்கள் பெயரை சிரமமின்றி கண்டுபிடிக்க முடியும் என்று தெரிவித்தார்.

Alphabetical Voter List Sathyaprada

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பணியாற்றும் தேர்தல் பணியாளர்களுக்கான முதல் கட்ட பயிற்சி மார்ச் 24-ம் தேதி அளிக்கப்பட்டது. 2-ம் கட்ட பயிற்சி கடந்த 7-ம் தேதி வழங்கப்பட்டது. அடுத்தகட்ட பயிற்சி ஏப்.18-ம் தேதி வழங்கப்படும். தேர்தல் பணியாளர்களுக்கு தாங்கள் வசிக்கும் சட்டப்பேரவை தொகுதிக்குள் பணி வழங்கப்பட்டால், இடிசி எனப்படும் பணியாற்றும் வாக்குச் சாவடியிலேயே மின்னணு வாக்குப்பதிவு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. வேறு தொகுதி என்றால் தபால் வாக்கு வசதி வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் தகவல் சீட்டை  பொருத்த வரை, காலை 11 மணி நிலவரப்படி, 6.23 கோடி வாக்காளர்களில் 33.46 சதவீதம் அதாவது, 2 கோடி 8 லட்சத்து 59,559 பேருக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஏப்.13-ம் தேதிக்குள் அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட்டுவிடும்.

வாக்குச்சாவடி குறித்த குழப்பங்கள் இருந்தால், வாக்காளர் உதவி செயலியில் தங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து, பாகம் எண் உள்ளிட்ட விவரங்களை பெறலாம். வாக்காளர் பட்டியலில் பெயரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படும் என்பதால், வாக்குச்சாவடியில் உள்ள உதவி மையத்தில், அகர வரிசைப்படியான வாக்காளர் பட்டியல் இருக்கும். அங்குள்ள அலுவலர் அதைபார்த்து வாக்குச்சாவடி தொடர்பான தகவல், பாகம் எண் உள்ளிட்ட விவரங்களை தருவார்.

வாக்குச்சாவடி வசதி

  • வாக்குச்சாவடிகளில் பொதுமக்களுக்கான வசதிகளான சாமியானா பந்தல், இருக்கை, குடிநீர், கழிவுநீர் வசதிகள் 100 % செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தள வசதி இல்லாத பள்ளிகள் உள்ளிட்ட வாக்குச்சாவடி அமைவிடங்களில், பொதுப்பணித் துறை சார்பில் தேர்தலுக்கு 3 நாட்கள் முன்னதாக தற்காலிக சாய்தள அமைப்பு உருவாக்கப்படும்.
  • தற்காலிக கழிப்பறை உள்ளிட்ட வசதிகளைஏற்படுத்தவும் சம்பந்தப்பட்ட துறை செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • வாக்குச்சாவடியிலும் மின் வசதி உள்ளிட்ட சிலவற்றுக்கு தேர்தல் துறையால் ரூ.1,300 வழங்கப்படும்.
  • சாமியானா போன்றவற்றுக்கு உள்ளாட்சி நிதியில் இருந்து பணம் எடுக்கப்பட்டு பின்னர், தேர்தல் ஆணையம் அந்த நிதியை வழங்கும்.
  • தமிழகத்தில் ஏப்.19-ல் வாக்குப்பதிவு முடிந்தாலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4 வரை நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.
  • அருகில் உள்ள மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால், ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக பணம், பொருட்கள் கொண்டு செல்லப்படும் பட்சத்தில் பறிமுதல் தொடரும்.
  • பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ குழு எண்ணிக்கை குறைக்கப்பட்டு, தொகுதிக்கு தலா ஒரு குழு பணியமர்த்தப்படும் என்று சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *