Anna Centenary Library Gave Good News to School and College Readers!!

பள்ளி, கல்லூரி வாசகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அண்ணா நூற்றாண்டு நூலகம்!!

Anna Centenary Library

2010-ம் ஆண்டு சென்னை கோட்டூர்புரத்தில் தொடங்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், (Anna Centenary Library) இதுவரை வாசகர்களுக்கு குறிப்பு எடுக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வாசகர்கள் வீட்டிற்கே புத்தகங்களை எடுத்து செல்லும் வகையில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.

Anna Centenary Library

ஆறு லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்களை உள்ளடக்கிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், வருடந்தோறும் லட்சக்கணக்கான வாசகர்கள் வந்து இங்குள்ள புத்தகங்களை பயன்படுத்தி குறிப்புகள் எடுத்து வருகின்றனர். கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமின்றி, போட்டித் தேர்வினை எழுதுவோருக்கும் இந்த நூலகம் ஒரு வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.

வாசகர்கள்,போட்டித்தேர்வுக்கு தயாராகுவோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக ஒரு புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு அதன்படி தற்போது வாசகர்கள் வீட்டிற்கே புத்தகங்களை எடுத்து செல்லும் வகையில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுமார் ஆறு லட்சம் புத்தகங்களை உள்ளடக்கிய இந்த நூலகத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலான புத்தகங்களை, வாசகர்கள் வீடுகளுக்கு எடுத்துச்சென்று பயன்படுத்திக் கொள்ளும்  திட்டமானது, வருகின்ற மார்ச் 12-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *