April 19: Holiday for Koyambedu Vegetable and Fruit Markets due to Vote Registration

ஏப்ரல் 19: வாக்கு பதிவு முன்னிட்டு  கோயம்பேடு காய்கறி, பழ சந்தைகளுக்கு விடுமுறை

April 19: Holiday for Koyambedu

ஏப்.19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு (April 19: Holiday for Koyambedu) நடைபெறுவதை ஒட்டி கோயம்பேடு காய்கறி மற்றும் பழ சந்தைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கோயம்பேடு வணிக வளாக அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

April 19: Holiday for Koyambedu

3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சுமை தூக்குதல், தள்ளு வண்டி இயக்குதல், கடைகளில் கணக்குகளை எழுதுவது, கனரக வாகனங்களை இயக்கும் ஓட்டுநர் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் இவர்களும் வாக்களிக்க ஏதுவாக, வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்.19-ம்தேதி கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை விடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு சந்தை பணியாளர்களும் எவ்வித தடையும் இன்றி வாக்களிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்.19-ம் தேதி காய்கறி மற்றும் உணவு தானிய வளாகம் ஆகியவற்றுக்கு முழு விடுமுறை விடப்படுகிறது என்று கோயம்பேடு வணிக வளாக அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகர் தெரிவித்துள்ளார். மலர் சந்தை 19-ம்தேதி வழக்கம் போல் இயங்கும். கடைகளுக்கு விடுமுறை இல்லை என்று பூ வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *