Artist Centenary Bus Station Will be Inaugurated Tomorrow Under the Leadership of the Chief Minister !!

முதலமைச்சர் தலைமையில் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்” நாளை திறப்பு !!

Artist Centenary Bus Station

கோயம்பேடு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், புதிய பஸ் நிலையம் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சென்னை கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை (Artist Centenary Bus Station) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 11 மணிக்கு திறந்து வைக்கிறார்.

Kilambakkam-Bus-Stand Artist Centenary Bus Station

கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில், சுமார் 59.86 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் 2018-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டு வந்த இந்த புதிய பஸ் நிலையத்தின் பெரும்பாலான பணிகள் தி.மு.க. ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப் பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் கடந்த 12-ம் தேதி 100-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கி முதற்கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில்  கிளாம் பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 11 மணிக்கு திறந்து வைக்கிறார். இதனையொட்டி திறப்பு விழாவுக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆலந்தூர் முதல் வண்டலூர் வரை உற்சாக வரவேற்பு அளிக்க திமுகவினர்  ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் பஸ் நிலையத்தின் உள்ளேயே அனைத்து அரசு, தனியார் பஸ்களையும் இயக்கும் வகையில் போதுமான இட வசதிகளுடன் மிகவும் விசாலமாக கட்டப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 130 அரசுப் பஸ்கள், 85 தனியார் ஆம்னி பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் இங்கு வசதிகள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *