Australian Team that Won the Junior World Cup

ஜூனியர் உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணி

Australian Team

தென் ஆப்ரிக்காவில் ஜூனியர் உலக கோப்பை தொடர் (19 வயது) நடந்தது. பெனோனியில் நடந்த பைனலில் இந்தியா, ஆஸ்திரேலிய (Australian Team) அணிகள் களம் இறங்கின. இந்திய கிரிக்கெட் அணியை 79 ரன் வித்தியாசத்தில் வென்று ஆஸ்திரேலிய அணி, கோப்பையை தட்டிச் சென்றது.

Junior-World-Cup Australian Team

டிக்சன் ஆஸ்திரேலிய அணிக்கு அதிரடி துவக்கம் தந்தார். திவாரி ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். லிம்பானி ‘வேகத்தில்’ சாம் கோன்ஸ்டாஸ்(0) வெளியேறினார். பின் ஹாரி டிக்சன், கேப்டன் வெய்ப்ஜென் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 78 ரன் சேர்த்தனர். வெய்ப்ஜென், 48 ரன் சிறிது நேரத்தில் திவாரி பந்தில் முருகன் அபிஷேக்கின் கலக்கல் ‘கேட்ச்சில்’ டிக்சன் –42 அவுட்டானார். அப்போது ஆஸ்திரேலியா 22.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 99 ரன் எடுத்து தவித்தது. தொடர்ந்து இந்திய பவுலர்கள் நெருக்கடி கொடுக்க கடைசி 10 ஓவரில் 66 ரன் எடுக்கப்பட்டன. ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 253 ரன் எடுத்தது. இந்திய அணி 43.5 ஓவரில் 174 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. கடந்த ஆண்டு நடந்த ‘சீனியர்’ உலக கோப்பை தொடரிலும் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *