Ayodhya Ram Temple Kumbabhishekam: Ministry of Information and Broadcasting Notification to Media Department!

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: ஊடகத்துறைக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம்  அறிவிப்பு !

Ayodhya Ram Temple

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் (Ayodhya Ram Temple) நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் செய்திகளை தவிர்க்குமாறு பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

Ayodhya-Ram-Temple

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம்

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் செய்தி குறிப்பில் ஜனவரி  22-ம் தேதி, அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் சமூக நல்லிணக்கத்தையும் பொது ஒழுங்கையும் சீர்குலைக்கும் ஆத்திரமூட்டும் மற்றும் போலியான செய்திகள் ஊடகங்களில் குறிப்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படவாய்ப்பு ள்ளது. தொலைக்காட்சிகளுக்கான நிகழ்ச்சி விதிகள் குறித்து கேபிள் டிவி நெட்ஒர்க்குகள் ஒழுங்கு முறைச் சட்டம் தெளிவுபடுத்துகிறது. பத்திரிகைகளுக்கான ஒழுங்கு விதிகளை பிரஸ் கவுன்சில் சட்டத்தின் கீழ் இந்திய பிரஸ் கவுன்சில் வகுத்துள்ளது. அதோடு, சமூக ஊடகங்களுக்கென தகவல் தொழில்நுட்பம் விதிகள் நடைமுறையில் உள்ளன.

செய்தித்தாள்கள், தனியார் தொலைக்காட்சி சேனல்கள், நடப்பு விவகாரங்களை வெளியிடுபவர்கள் செயல்பட வேண்டும் மதநல்லிணக்கத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு விளைவிக்கும் செய்திகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். செய்திகள் வெளியாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை சமூக ஊடக நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *