Ayodhya with Festival Kolam! Kumbabhishekam was Well Done!!

விழா கோலம் கொண்ட அயோத்தி! சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேகம்!!

Ayodhya with Festival

அயோத்தியில் (Ayodhya with Festival ) ராமர் கோவிலின் வரலாற்று சிறப்புமிக்க திறப்பு விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி ராமர் கோவிலை திறந்து வைத்து, விழாவிற்கு தலைமை தாங்கினார். இராமர் கோவில் திறப்பு இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மத வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது.

Ram

 

அயோத்தியில் ராமர் கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களால் கவனத்தை ஈர்த்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் நடந்த இந்த ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராமர் கோவில் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் சந்திரகாந்த் பி சோம்புராவால் வடிவமைக்கப்பட்டது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடந்தது. இதனால் அயோத்தி நகரமே விழாக்கோலம் கொண்டிருந்தது.

கும்பாபிஷேகம் விழா

  • அயோத்தி ராமர் கோவில் சராயு நதிக்கரையில் அமைந்துள்ளது.
  • மதியம் 12.05 மணிக்கு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா துவங்கியது.
  • கும்பாபிஷேகம் மதியம் 12.30 முதல் 12.45 மணிக்கு நடைபெற்றது.
  • 12.29 நிமிடம், 8 வினாடி முதல் 12.30 நிமிடங்கள் 32 வினாடிகள் தான் மிக நல்ல நேரம்
  • இந்த நேரத்தில் குழந்தை பருவ ராமர் சிலைக்கு பிரதிஷ்டை சடங்குகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
  • இந்த நேரம் தான் மிகவும் முக்கியமானதாகும்; இந்த நேரத்தில் தான் பிரதமர் மோடியும் கோவிலில் சடங்குகள் செய்தார்.
  • விழாவில் மொத்தம், 3 ஆயிரம் வி.வி.ஐ.பி.,க்கள் உள்பட, 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டனர்.
  • 10 ஆயிரத்துக்கும் அதிகமான சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 30 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
  • விபத்துக்கள், அசம்பாவிதங்களை தடுக்க நீச்சல் வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

கும்பாபிஷேகம் புகை படங்கள்

UP

UP-SRI-RAM

Sri-Ram

 

Ram

 

Jan-22-Sri-Ram Ayodhya with Festival

Ayothi

Ayodhya with Festival-Sri-Ram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *