Bharat Ratna Award Announced to An Agronomist From Tamil Nadu

தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானிக்கு அறிவிக்கப்பட்ட  பாரத ரத்னா விருது

Bharat Ratna Award

தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி மற்றும் இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன், அவர்களுக்கு “பாரத ரத்னா விருது” (Bharat Ratna Award) அறிவிக்கப்பட்டுள்ளது.

Bharat Ratna Award

எம்.எஸ்.சுவாமிநாதன் பிறப்பு

(Bharat Ratna Award)

தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் 1925-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி எம்.எஸ்.சுவாமிநாதன் பிறந்தார். இரண்டாம் உலகப்போரின் நாடு முழுவதும் உணவு பற்றாக்குறை ஏற்பட்ட போது மனம் வருந்திய சுவாமிநாதன், அவர்கள் இந்தியாவுக்கு போதுமான உணவு தானியம் கிடைப்பதை உறுதி செய்ய முடிவு செய்து வேளாண் ஆராய்ச்சிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து மெட்ராஸ் வேளாண்மை கல்லூரியில் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றார். டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியானார். பின்னர் IPS  பணியை துறந்து வேளாண் ஆராய்ச்சி படிப்புக்காக நெதர்லாந்து சென்றார்.

பசுமை புரட்சிக்கு வித்திட்ட எம்.எஸ்.சுவாமிநாதன்

1954-ல் இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்ட M.S.சுவாமிநாதன் இந்தியாவில் முதல் முறையாக வீரிய ரக கோதுமையை உருவாக்கி இந்தியாவின் கோதுமை உற்பத்தி பன்மடங்கு அதிகரித்தது, இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தை என்று சுவாமிநாதன் அழைக்கப் படுகிறார். மேலும் பத்ம பூஷண், பத்ம விபூஷண், உலக உணவு பரிசு, ரமோன் மகசேசே உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் பிறப்பு (Former Prime Minister Chaudhry Charan Singh was born)

உத்தர பிரதேசத்தின் மீரட் மாவட்டம், நூர்பூர் கிராமத்தில் 1902-ம் ஆண்டில் விவசாய குடும்பத்தில் சவுத்ரி சரண் சிங் பிறந்தார். அவர் சட்டம் பயின்ற போது காந்தியடிகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று பலமுறை சிறை சென்றார். சுதந்திர போராட்ட காலம் முதல் காங்கிரஸில் இருந்த சரண் சிங் கடந்த 1967-ம்ஆண்டு பாரதிய கிரந்தி தளம் என்ற கட்சியை தொடங்கினார்.

Chaudhry Charan Singh

  • நாட்டின் 5-வது பிரதமராகப் பதவி வகித்த சவுத்ரி சரண் சிங். உத்தர பிரதேசத்தின் முதல்வராக இருமுறை பதவி வகித்தார்.
  • மத்திய உள்துறை, நிதித்துறை அமைச்சராகவும் துணை பிரதமராகவும் சரண் சிங் பணியாற்றி,
  • தனது வாழ்நாள் முழுவதும் விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தி இன்று வரை உத்தர பிரதேச விவசாயிகளின் தலைவராக அவர் போற்றப் படுகிறார்.

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் பிறப்பு (Birth of former Prime Minister Narasimha Rao)

ஆந்திராவின் வாரங்கல் மாவட்டம், லக்னே பள்ளி கிராமத்தில் நரசிம்ம ராவ் 1921-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி பிறந்தார். சட்டம் படித்த அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து சுதந்திர போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். கடந்த 1971-ம் ஆண்டில் ஆந்திர முதல்வராகப் பதவியேற்றார். மத்திய உள்துறை, பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை அமைச்சராக திறம்பட பணியாற்றி 1991 முதல் 1996 வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்தார்.

Narasimha-Rao

Bharat Ratna Award

  • உலக பொருளாதாரத்துக்காக இந்தியாவின் வாயில்களை திறந்து இந்திய பொருளாதாரத்தை தலை நிமிர்த்தினார்.
  • இஸ்ரேல் நாட்டுடன் உறவு, கிழக்குஆசிய வெளியுறவு கொள்கைக்கு முன்னுரிமை, இந்தியாவின் அணுசக்தி திட்டங்களுக்கு காரணமாக இருந்த,  நரசிம்ம ராவுக்கு 17 மொழிகள் தெரியும்.
  • நேரு குடும்பத்தை சேராத காங்கிரஸ் பிரதமராக 5 ஆண்டுகள் முழுமையாக பதவி வகித்தவர் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *