Bihar Govt Schools to Function for 6 Hours Only – Chief Minister Nitish Kumar Announced

பீகார் அரசு பள்ளிகள் 6 மணி நேரம் மட்டும் செயல்படும் – முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு

Bihar Govt Schools

பீகாரில் அரசு நடத்தும் பள்ளிகள் இனி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். தற்போது பள்ளி நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 8 மணி நேரமாக உள்ள நிலையில், அரசு பள்ளிகளின் நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து அதன்படி இனி பள்ளிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்பட வழி வகை செய்யப்பட்டுள்ளது.

Bihar-Govt-Schools

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று சட்டப் பேரவையில் வெளியிட்ட அறிக்கையில்  நிதிஷ்குமார், கல்வி நடவடிக்கைகளுக்கான பள்ளிகளின் நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே இருக்க வேண்டும். அது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்கக்கூடாது என்றார்.

மகாராஷ்டிரா அரசு 2024 – 25 ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நேரம் குறித்த மாற்றங்களை அறிவித்திருந்தது. முன்னதாக மாநிலத்தின் அனைத்து பள்ளிகளும் காலை 9 மணிக்கு முன்னதாகவே தொடங்கும் வழக்கத்தை கொண்டிருந்த நிலையில் மாணவர்கள், பள்ளிக்கு கிளம்புவதற்கு அதிகாலையிலேயே தங்கள் தூக்கத்தை கெடுத்து தயாராக வேண்டிய நிலை உள்ளது. போதிய தூக்கம் இன்மை குழந்தைகளின் உடல் மற்றும் மனநல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்ததை தொடர்ந்து மகாராஷ்டிரா அரசு புதிய உத்தரவை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *