Bird Flu that Easily Infects Humans – Doctors Warn!!

மனிதர்களை எளிதில் தாக்கும் பறவை காய்ச்சல் – எச்சரிக்கும் மருத்துவர்கள்!!

Bird Flu

அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியை சேர்ந்த பண்ணைத் தொழிலாளி ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு அளிக்கப்பட சிகிச்சையில் எச்பிஏஐ ஏ (எச்5என்1) வகை பறவைக் காய்ச்சல் ( Bird Flu) வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் தொற்று மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 Bird Flu

எச்பிஏஐ ஏ (எச்5என்1) இதைத்தான் மருத்துவ நிபுணர்கள் பறவைக் காய்ச்சல் தொற்று என்று தெரிவிக்கின்றனர். பறவைக் காய்ச்சல் தொற்று மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பிருப்பதாகவும், மேலும் கரோனா போன்ற பெருந்தொற்று உலகில் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அண்டார்டிக் பகுதியில் ஏராளமான பெங்குயின்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த பண்ணைத் தொழிலாளி ஒருவர் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவருக்கு எச்பிஏஐ ஏ (எச்5என்1) வகை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் Bird Flu

2022-ல் முதன்முதலாக அமெரிக்காவின் கொலராடோவில் ஒரு நபருக்கு பறவைக் காய்ச்சல் ஏற்பட்டது. பறவைக் காய்ச்சல், பால் தரும் பசுக்கள் மூலம் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 2020-ம் ஆண்டு முதல் பறவைக் காய்ச்சல், எச்5என்1 (H5N1) என்ற நோய்க்கிருமி வகை, உலகம் முழுவதும் பரவி வருகிறது. பறவைகள் மற்றும் வனவிலங்கு களுக்கு பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி  80-க்கும் மேற்பட்ட நாடுகளில் டிசம்பர் 2023 நிலவரப்படி பறவைகளை பாதித்து, வைரஸால் கோழிப் பண்ணைகளில் லட்சக்கணக்கான கோழிகள், வான்கோழிகளும் உயிரிழந்தன.  அர்ஜெண்டினாவில் யானை கடற்பசுக்கள் என அழைக்கப்படும் சீல்கள் உயிரிழந்தன.

சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை Health Professionals Alert

எச்5என்1 வகை பறவைக்காய்ச்சல் மிகக் கொடியது என்றும், எளிதில் மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது கரோனா போன்ற பெருந்தொற்று நோயாகவும் மாற வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டெக்சாஸ் மாகாணத்தில் பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபருக்கு,தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள பசுக்களுக்கு இந்த பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

  • பறவைக் காய்ச்சல் வைரஸ் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பரவும் ஒரு பெருந்தொற்று நோயாக மாற வாய்ப்புள்ளது.
  • இது புதிதாக உருவாகி வரும் வைரஸ் அல்ல ஏற்கெனவே உலகம் முழுவதும் உள்ளது என ஆராய்ச்சி யாளர் டாக்டர் சுரேஷ் குச்சிப்புடி தெரிவித்தார்.
  • கரோனா பெருந்தொற்றை விட 100 மடங்கு ஆபத்தானதாகவும், மோசமானதாகவும் இருக்கும் என பயோநயாகரா மருந்து தயாரிப்புத் துறை ஆலோசகர் ஜான் ஃபுல்டன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *