Border – Gavaskar Test Series Schedule Released!!

பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அட்டவணை வெளியீடு!!

Border – Gavaskar

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் – கவாஸ்கர் (Border – Gavaskar) டெஸ்ட் தொடர் நவம்பர் 22-ம் தேதி தொடங்கும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Border - Gavaskar Test Series Schedule

  • 5 போட்டிகள் டெஸ்ட் தொடரின் அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
  • நவம்பர் 22-ல் பெர்த்தில் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.
  • இரண்டாவது போட்டி டிசம்பர் 6-ம் தேதி பகலிரவு ஆட்டமாக ஓவலில் நடக்கிறது.
  • மூன்று போட்டிகள் பிரிஸ்பேன், மெல்போர்ன் மற்றும் சிட்னி ஆகிய இடங்களில் முறையே டிச.14-ம் தேதி, டிச.26-ம் தேதி மற்றும் 2025 ஜன.3-ம் தேதி ஆகிய தினங்கள் நடக்கவுள்ளது.
  • இந்தியா 2017-ம் ஆண்டு தொடர் வெற்றிகளின் மூலம் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை தன்வசம் வைத்துள்ள நிலையில், 1991-92-க்குப் பிறகு முதல் முறையாக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஷஸ் தொடருக்கு நிகராக நடத்தவுள்ளது.
  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கடந்த ஆண்டுகளில் டெஸ்ட் தொடர் மிக சுவாரஸ்யமாக இருந்து வருவதால் இந்தமுறை இத்தொடரை அதிக எதிர்பார்ப்புடன் இருக்கும் என்றுள்ளார் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்லே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *