Candidates Request to Release the TRB Competitive Exam Schedule Soon

TRB போட்டி தேர்வு அட்டவணையை விரைந்து வெளியிட தேர்வர்கள் வேண்டுகோள் !!

Candidates Request

ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக போட்டி தேர்வுகளுக்கான உத்தேச வருடாந்திர கால அட்டவணையை வெளியிட  TRB காலதாமதம் செய்து வருவதாகவும், விரைந்து அட்டவணையை  வெளியிட தேர்வர்கள் வேண்டுகோள் (Candidates Request) விடுத்துள்ளனர்.

TRB-Board Candidates Request

பள்ளிக்கல்வி துறையில், 13,000 ஆசிரியர்கள் பணியிடங்களும், உயர் கல்வித் துறையில், 6,000த்துக்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்களும், காலியாக உள்ளன.

தமிழக அரசு இன்னும் உரிய முடிவெடுக்காததால், தேர்வு அட்டவணை தாமதமாகி உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியமான, TRB அதிகாரிகள் கூறுகின்றனர். பட்டதாரிகள் (தேர்வர்கள்) கூறுகையில், TRB  சார்பில், போட்டி தேர்வுகள் எப்போது நடத்தப்படும், எந்தெந்த பதவிக்கு காலியிடங்கள் நிரப்பப்படும் என, முன்கூட்டியே அறிவித்தால், அந்த தேர்வுகளுக்கு தயாராக முடியும் என்பதால் வருடாந்திர அட்டவணையை விரைந்து வெளியிட வேண்டும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *