Central Government Notification that Now Children Can Also Get Pension of Government Employees

அரசு ஊழியரின் ஓய்வூதியம் இனி குழந்தைகளும் பெறலாம் மத்திய அரசு அறிவிப்பு

Central Government Notification

அரசு ஊழியரின் ஓய்வூதியம் (Central Government Notification) கணவன் அல்லது மனைவிக்கு வழங்கப்படும் நிலையில், அவர்களின் திருமண விவகாரம் சர்ச்சையில் இருந்தால் அரசு பெண் ஊழியர் தனது மரணத்துக்கு பிறகு குடும்ப ஓய்வூதியம் பெற கணவருக்கு பதிலாக தனது குழந்தையை நியமிக்கலாம் என்று மத்திய அரசு விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Employees-Pension. Central Government

மத்திய அரசில் அல்லது மாநில அரசில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற பின்னர் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஓய்வூதியம், ஓய்வூதியதாரர்களுக்கும், அவர்களுக்கு பின்னர் அவர்களது வாழ்க்கை துணையான கணவன் அல்லது மனைவி குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மத்திய சிவில் சர்வீசஸ் ஓய்வூதியம் விதிமுறைகள், 2021-ன் 50-வது விதிமுறைகளின் படி, ஒரு அரசு ஊழியரோ அல்லது ஓய்வூதியம் பெறும் ஓய்வுபெற்ற அரசு ஊழியரோ மரணம் அடைந்தால், அவரது வாழ்க்கை துணைக்கு கணவன் அல்லது மனைவி குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். நடைமுறையாக உள்ளது.

ஓய்வூதியம் திருத்தம் Central Government Notification

  • அரசு ஊழியரின் வாழ்க்கை துணைக்கு தகுதி இல்லாவிட்டாலோ அல்லது அவரது மரணத்துக்கு பிறகோ அவர்களின் குழந்தைகள், வரிசை அடிப்படையில் குடும்ப ஓய்வூதியம் பெற தகுதி உடையவர்கள் ஆகிறார்கள்.
  • அரசு பெண் ஊழியர், தனது கணவருக்கு பதிலாக தனது குழந்தைக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்க செய்யலாம் என்று ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை தற்போது திருத்தம் செய்திருக்கிறது.
  • ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்: கணவருக்கு எதிராக விவாகரத்து வழக்கு தாக்கல் செய்த பெண் ஊழியர்கள், தங்கள் கணவருக்கு பதிலாக தங்கள் குழந்தையை குடும்ப ஓய்வூதியம் பெற நியமிப்பதற்கு அனுமதிக்கலாமா என்று கேட்டு, பல்வேறு அமைச்சகங்களிடம் இருந்து எங்களுக்கு கடிதங்கள் வந்தன.
  • அதன் அடிப்படடையில், இந்த திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறோம்.
  • கணவருக்கு எதிராக பெண் ஊழியர் தொடர்ந்த விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலோ, குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் கீழ் கணவருக்கு எதிராக அவர் புகார் அளித்திருந்தாலோ, அத்தகைய பெண் ஊழியர்கள் தங்கள் மரணத்துக்கு பிறகு, கணவருக்கு பதிலாக தங்கள் குழந்தைக்கு குடும்ப ஓய்வூதியம் அளிக்குமாறு தங்கள் துறை தலைவரிடம் எழுத்துபூர்வமாக எழுதி கொடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *