Change in Traffic Between Trichy and Pudukottai for Two Days in View of Prime Minister’s Visit

பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி – புதுக்கோட்டை போக்குவரத்தில் மாற்றம்

ஜனவரி 2-ம் தேதி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட புதிய முனைய திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக இரண்டு நாட்களுக்கு திருச்சி – புதுக்கோட்டை இடையே போக்குவரத்தில் மாற்றம் (Change in traffic) திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.

Change in Traffic

Change in Traffic

ஜனவரி 1  இரவு 8 மணி முதல் விமான நிலையம் வழியாக புதுக்கோட்டை செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் ஜி-கார்னர், டி.வி.எஸ்.டோல்கேட் மேம்பாலம், மன்னார்புரம் மேம்பாலம், எடமலைப்பட்டி புதூர் பைபாஸ் சந்திப்பு, விராலி மலை வழியாக புதுக்கோட்டை செல்ல வேண்டும்.

நாளை காலை 7 மணி முதல் சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் அனைத்துப் பேருந்துகளும் டி.வி.எஸ்.டோல்கேட்,
மன்னார்புரம், எடமலைப்பட்டி புதூர் பைபாஸ் சந்திப்பு, விராலி மலை வழியாக புதுக்கோட்டை செல்ல வேண்டும். திருச்சி விமான நிலையத்துக்கு செல்லும் கட்சியினரின் வாகனங்கள் பிரதமரை வரவேற்க விமான நிலையத்துக்கு வருகை தரும் கட்சித் தொண்டர்களின் வாகனங்கள் நாளை காலை 9 மணி வரை மட்டுமே புதுக்கோட்டை சாலையில் செல்ல அனுமதிக்கப்படும். குண்டூர், மாத்தூர், பாரதிதாசன் பல்கலைக் கழகம் செல்லும் கட்சியினரின் வாகனங்கள் டி.வி.எஸ்.டோல்கேட், மன்னார்புரம், எடமலைப்பட்டிபுதூர் பைபாஸ் சந்திப்பு, புதிய சுற்றுச்சாலை, கும்பக்குடி வழியாக செல்ல வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *