Chennai Ex-Mayor Saidai Duraisamy’s Son Vetrithuraisamy Recovered!

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றிதுரைசாமி உடல் மீட்பு!

Vetrithuraisamy

இமாச்சல பிரதேசத்துக்குச் சுற்றுலா சென்ற வெற்றி துரைசாமி (Vetrithuraisamy)பிப்ரவரி 4ஆம் தேதி கஷங் நுல்லா பகுதியிலிருந்து சிம்லா நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் சட்லெஜ் நதியில் விழுந்து விபத்துக்கு உள்ளானது. இமாச்சலப்பிரதேசத்தில் கார் விபத்தில் சட்லெஜ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் பிப்ரவரி 12 (இன்று) மீட்கப்பட்டுள்ளது.

Vetrithuraisamy

சென்னை முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர்
கோபிநாத்துடன் இமாச்சல பிரதேசத்துக்குச் சுற்றுலா சென்ற போது பிப்ரவரி 4ஆம் தேதி கஷங் நுல்லா பகுதியிலிருந்து சிம்லா நோக்கிச் சென்று கொண்டிருந்த வெற்றிதுரைசாமி கார் சட்லெஜ் நதியில் விழுந்து விபத்துக்கு உள்ளானது.

விபத்து நடந்த பகுதியிலிருந்த ரத்தக் கறை, திசுக்களை இமாச்சல் காவல்துறையினர் சேகரித்து, DNA பரிசோதனைக்கு அனுப்பினர். சென்னையில் அவரது குடும்பத்தினரிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, DNA பரிசோதனைக்காக இமாச்சலுக்கு அனுப்பப்பட்ட முடிவுகள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெற்றியின் உடல் மீட்கப்பட்டிருப்பதாக இமாலச்சல பிரதேச போலீசார் தெரிவித்தது சைதை துரைசாமியின் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 8 நாட்களாக வெற்றி துரைசாமியைத் தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில்  ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்று தேடியதில் வெற்றியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு அவரது உடலை ரெகாங்புவாவில் உள்ள மருத்துவமனைக்கு போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *