Chennai-Nellai Vande Bharat Train will run from this Month (July) 2023

சென்னை – நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கம்  இந்திய ரயில்வே துறை தகவல்

இந்திய ரயில்வே துறையை மேம்படுத்த ரயில்வே அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அதி நவீன சொகுசு வசதிகளுடன் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயிலை கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்த ரயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் என ரயில்வே பயணிகள் சங்கம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. அதுமட்டுமின்றி சென்னை – நெல்லை இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க தேவையான நடவடிக்கையை ரயில்வே துறை மேற்கொண்டுள்ளது.

நெல்லை-நாகர்கோவில் இடையே அகல ரயில் பாதை பணிகளை சமீபத்தில் ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் வரும் அக்டோபர் மாதம் சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்றார்.

ஜூலை கடைசி வாரத்தில் 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுக்கு பதிலாக 8 பெட்டிகளுடன் இயக்கப்படும்.

சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் 8 பெட்டிகள் இருக்கும்.
இதில் 1 பெட்டி விஐபிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பக்கத்திலும் 2 இருக்கைகள் உள்ளன. இதேபோல், மீதமுள்ள 7 பெட்டிகளில் ஒருபுறம் 3 இருக்கைகளும், மறுபுறம் 2 இருக்கைகளும் என ஒரு வரிசையில் 5 அல்லது 6 இருக்கைகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் ஒரே நேரத்தில் மொத்தம் 552 பயணிகள் பயணம் செய்யலாம் என்றும் காத்திருப்போர் பட்டியல் உள்ளிட்ட வசதிகள் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வி.ஐ.பி. பெட்டியில் பயணிக்க ஒருவருக்கு ரூ.2,800 முதல் ரூ.3,000 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற பெட்டிகளில் பயணிக்க ஒரு நபருக்கு ரூ.1,200 முதல் ரூ.1,300 வரை வசூலிக்கப்படும். இந்த ரயில் நெல்லையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 2 மணிக்கு சென்னை சென்றடையும்.

மறுமார்க்கம் சென்னையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.  சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் இந்த மாதமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தென் மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையை அடைய 10 மணி 10 நிமிடங்கள் ஆகும். தற்போது வந்தே பாரத் ரயில் 8 மணி நேரத்தில் வந்து சேரும். இதனால் பயண நேரம் 2 மணி நேரத்திலிருந்து 2.30 மணி நேரம் வரை மிச்சமாகும் என்றார்.  மேலும் இந்தியாவில் அதிவேக புல்லட் சேவையை மத்திய ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *