CM Stalin Inaugurated 100 New BSVI Bus Services in Tamil Nadu today!

தமிழகத்தில் 100 புதிய BSVI பேருந்து சேவையை முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்!

New BSVI Bus Services

100 புதிய BSVI பேருந்துகளை (New BSVI Bus Services) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 20) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

New BSVI Bus Services

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் போக்குவரத்துச் சேவைகளை அரசு வழங்கி வருகிறது. 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், நல்ல நிலையில் உள்ள 500 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்புகளின்படி, பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையிலும், அரசுப் போக்குவரத்து கழகங்களில் புதிய பேருந்துகளை இயக்கிடும் வகையிலும், ரூ.634.99 கோடி மதிப்பீட்டில் புதிதாக 1,666 BSVI பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 40 புதிய பேருந்துகள், கோயம்புத்தூர் 40, கும்பகோணம் 10, திருநெல்வேலி 5, மதுரை 5 புதிய பேருந்துகள் என மொத்தம் 100 புதிய BSVI பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *