Commencement of Special Train Between Coimbatore – Rajasthan from Tomorrow

நாளை முதல் கோவை – ராஜஸ்தான் இடையே சிறப்பு ரயில்  தொடக்கம்

Special Train Coimbatore – Rajasthan

கோவையில் இருந்து ராஜஸ்தான் (Special Train Coimbatore – Rajasthan) மாநிலம் பஹத்ஹிகோதி ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் நாளை (வியாழக்கிழமை) முதல் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி வரை வாரந்தோறும்  இயக்கப்படுவதாக சேலம் ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Special-Train-Coimbatore-Rajasthan

கோவையில் இருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் கோவை- பஹத்ஹிகோதி சிறப்பு ரயில் (எண் 06181) சனிக்கிழமைகளில் காலை 11.30 மணிக்கு பஹத்ஹிகோதி ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

வருகிற 17-ந் தேதி முதல் ஏப்ரல் 7-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் பஹத்ஹிகோதி நிலையத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும். பஹத்ஹிகோதி- கோவை விரைவு ரயில் (எண் 06182) புதன்கிழமைகளில் காலை 9.30 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும்,  ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணி குண்டா, கடப்பா, கூட்டி, காச்சிகுடா, நிஜாமாபாத், பூர்னா, வாசிம், அகோலா, சூரத் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *