Compulsory Education Scheme: Free Admission in Private Schools to Begin on April 3

கட்டாய கல்வி திட்டம்: தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை ஏப்ரல் 3-இல் தொடக்கம்

Compulsory Education

RTE சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத  இலவச மாணவர் (Compulsory Education)  சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஏப்ரல் 3-வது வாரத்தில் தொடங்க உள்ளது.

Compulsory Education

இலவச கட்டாய கல்வி (RTE)

இலவச கட்டாய கல்வி உரிமை (RTE) சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் உள்ள 25 % இடங்களில், வறுமை நிலையில் உள்ள குழந்தைகள் சேர்க்கப் படுவார்கள்.  தமிழகம் முழுவதும் உள்ள 8,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள் உள்ளன. திட்டத்தில் LKGஅல்லது 1-ம் வகுப்பில் சேர்பவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணமின்றி இலவசமாக படிக்கலாம்.

தமிழகத்தில் 2013-ல் அமலான இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 4.60 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற்று படித்து வருகின்ற இவர்களுக்கான கல்விக் கட்டணமாக தமிழக அரசு சார்பில் தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் சராசரியாக ரூ.370 கோடி வழங்கப்படுகிறது.

2024-25 கல்வி ஆண்டில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஏப்ரல் 3-வது வாரத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. RTE திட்டத்தின்கீழ் சிறுபான்மை பள்ளிகள் தவிர்த்து, மற்ற அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ICSE, CBSE பள்ளிகளிலும் இலவசமாக மாணவர் சேர்க்கை பெறமுடியும்.

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் வருமானம், இருப்பிடம், சாதிச் சான்றிதழ்களை சமர்ப்பிப்பது அவசியம். எனவே, சேர்க்கைக்கு தேவையான ஆவணங்களை முன்கூட்டியே தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *