Construction of Ayodhya Ram Temple Incorporates State-of-the-Art Technology in the Building System

அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட  அயோத்தி ராமர் கோவிலின் கட்டிட அமைப்பு

Construction of Ayodhya Ram Temple

ராமர் கோயில்:  உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாய் கட்டப்பட்டுள்ள (Construction of Ayodhya Ram Temple) பிரமாண்டமான ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற்றது. அதன் கட்டிட அமைப்பில் பண்டைய நம்பிக்கைகளுடன் நவீன அறிவியலையும் ஒன்றிணைத்து அமைத்துள்ளது.

Construction of Ayodhya Ram Temple

அதிநவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயில் மோசமான நிலநடுக்கங்கள், பெருவெள்ளங்கள் என பல நூற்றாண்டுகளுக்கு தாங்கக்கூடிய வல்லமையுடன் அமைக்கப் பட்டுள்ளது. டாடா கன்சல்டிங் இஞ்சினியரஸ் லிமிடெட்டும் லார்சன் அண்டு டூப்ரோவும் இணைந்து சிறப்பாகத் திட்டமிட்டு நவீன கட்டடத் தொழில்நுட்பத்தால் கோயில் கட்டப்பட்டு உள்ளது. கோயில் வடிவமைப்பு நகரா ஸ்டைல் (Nagara style) கட்டடக்கலையைச் சார்ந்துள்ள இதில் முழுக்க முழுக்க கருங்கல்லால் ஆன 360 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Construction of Ayodhya Ram Temple

நவீன இரும்பு, எஃகு அல்லது சிமெண்ட் பயன்படுத்தப் படவில்லை. மற்ற பொருட்களை விட கருங்கல்லின் ஆயுட்காலம் அதிகம் என்பதால் நிலநடுக்கத்தைத் தாக்குப் பிடிக்கும் வகையில் இந்த வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.5 நிலநடுக்கத்தைத் தாங்கக் கூடியது. அடுத்த 1000 ஆண்டுகளுக்கு எந்த சீரமைப்பு பணியும் தேவைப்படாது. 15 மீட்டர் தடிமனான காம்பாக்டடு கான்கிரீட் கொண்டு ஒரு படிவம் அமைக்கப்பட்டு, அதில் 56 அடுக்கு காம்பாக்டடு கான்கிரீட் உடன் ஃப்ளை ஆஷ், தூசு, கெமிக்கல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பிரமாண்டமான 21 அடி கிரானைட் கல்லால் ஆன அடித்தளத்தின் ஈரப்பதம் கோயிலை பாதிக்காது.

சென்னை ஐஐடி

  • கட்டிட பணியில் 150 இஞ்சினியர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
  • சென்னை  (Chennai IIT) இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜியின் அறிவுரைப் படி இஞ்சினியர்கள் 15 மீட்டர் ஆழத்துக்கு தோண்டி அடியில் இருந்த மண்ணை அகற்றினர்.
  • ரீஇஞ்சினியர்டு மண்ணை வைத்து நிரப்பினர்.
  • ரீஇஞ்சினியர்டு மண் அடித்தளத்தில் 14 நாட்களில் கல்லாக மாறிவிடும்.
  • இப்படி 47 அடுக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
  • CISR அமைப்பு ரூர்க்கி, சென்ட்ரல் பில்டிங் ரிசர்ச் இன்ஸ்டிட்டியூட் டைரக்டர் கோயில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட கல்லின் தரத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
  • மற்ற பொருட்கள் போல துருப்பிடிக்காத தன்மை கொண்டதாகக் கூறினார்.
  • கோயில் அமைந்துள்ள நிலப்பரப்பு எந்தவித வெள்ளப்பெருக்காலும் பாதிக்காத நிலமட்டத்தில் அமைந்துள்ளது.
  • ராமநவமி தினத்தன்று கோயில் விக்ரகங்களின் நெற்றியில் சூரிய ஒளி வந்து படும்வகையில் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • ராமர் கோயில் ஆன்மிகத்தையும் நவீன தொழில்நுட்பத்தையும் ஒன்று சேர அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *