Corona on the Rise in India – Health Department Warning!

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

Corona

கொரோனா (Corona)பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவில் அதிக பட்சமாக கர்நாடகத்தில் 73 பேருக்கு தொற்று  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த படியாக மகாராஷ்டிரத்தில் 50 பேருக்கும், ராஜஸ்தானில் 11 பேருக்கும், தமிழ்நாட்டில் 9 பேருக்கும், தெலங்கானாவில் 8 பேருக்கும் கொரோனா தொற்று சுகாதாரத்துறையால் உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் நேற்று 357 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில், சென்னை மாவட்டத்தில் 14 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 பேருக்கும், திருவாரூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தலா 2 பேருக்கும், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், தஞ்சாவூர், மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

Corona-Virus-Increasing-Again

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பில் இருந்து 20 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 9 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  இந்தியாவில் இதுவரை 4,054 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு சிகிச்சையில் உள்ளனர். தலைநகரான டெல்லியில் நேற்று மட்டும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சௌரப் பரத்வாஜ், “சராசரியாக ஒரு நாளுக்கு 400 – 500 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப் படுகிறது. ஒரு நாளுக்கு சராசரியாக பதிவாகும் விகிதம் இன்னும் அதிகரிக்கவில்லை என்பதே ஒரே நேர்மறையான விஷயம். நேற்று 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்”, மேலும் சுகாதாரத் துறையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *