Cuddalore: About, History, Population, Behind the name, Places to visit (Tourism), Airport, Pin code

Cuddalore: About, History, Population, Behind the name, Places to visit (Tourism), Airport, Pin code

கடலூர்

கடலூர் மாவட்டம், (Cuddalore) தென்ஆற்காடு மாவட்டத்திலிருந்து 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி அன்று கடலூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டது. கடலூர் நகரம் மாவட்ட தலைநகரமாக இருந்ததால் இம்மாவட்டத்திற்கு கடலூர் மாவட்டம் என பெயரிடப்பட்டது.

Cuddalore

வரலாறு

  • ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் இந்நகரம் மைசூர் மன்னர் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இந்நகரம் இஸ்லாமாபாத் என வழங்கப்பட்டது.
  • அவரது மறைவிற்கு பிறகு ஆங்கிலேயர் இந்நகரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டனர்.
  • இதன் விளைவாக 1783-இல் போர் மூண்டது. இப்போருக்குப் பின்னர் கடலூர் நகரை ஆங்கிலேயர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
  • ஆங்கிலேயர் இந்நகரை ஒரு பெரிய துறைமுகமாக மாற்றினர். சரக்கு கப்பல் போக்குவரத்திற்கு இந்நகரை பெரிதும் பயன்படுத்தினர்.
  • குறிப்பாக நெல்லிக்குப்பத்தில் தாங்கள் துவங்கிய சர்க்கரை ஆலையின் சரக்குகள் கடலூர் துறைமுகத்தில் கையாளப்பட்டது.
  • ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த போது செஞ்சியை ஆண்ட மன்னர்களிடம் இருந்து கடலூரில் இருந்த புனித டேவிட் கோட்டையை வாங்கினார்கள்.
  • ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன,

பெயர்க்காரணம் (Cuddalore)

  • பல நூற்றாண்டுக்கு முன் இவ்வூர் இருக்கும் இடத்தில் கடல் சூழ்ந்து இருந்ததாகவும், பின்னாளில் அந்த கடல் நீர் வற்றி நிலப்பரப்பாக உருவாகியதால் இவ்வூருக்கு (கடல்+ஊர்) கடலூர் என்று பெயர் வந்ததாக கருத்து நிலவுகின்றது.
  • சோழர் காலத்தில் கடல் வழி வணிக முறை கப்பல் வழியே இவ்வூரில் நடந்ததாலும். பின்பு வந்த ஆங்கிலேயர்களின் ஆட்சியில் கப்பல் வழி வணிக முறையை துறைமுகம் மூலம் கடல் வழியில் செய்ததால் கடலூர் என்று பெயர் ஏற்பட்டது.
  • அன்றைய காலத்தில் இவ்வூரில் நிலக்கடலைப் பயிரை அதிக அளவு விவசாயம் செய்து அதை பல நாடுகளுக்கும், பல ஊர்களுக்கும் கப்பல் வழியாகவும், தரை வழி போக்குவரத்தாகவும் கொண்டு செல்லபட்டதால் இவ்வூருக்கு கடலையூர் என்று அழைக்கபட்டது. அந்த பெயரே காலபோக்கில் மருவி கடலையூர்-கடலூர் ஆக மாறியது என்றும் கருத்து நிலவுகின்றது.
  • முற்காலத்தில் கடலூர், கூடலூர் என்றும் அழைக்கப்பட்டது. அதற்கு காரணம் இம்மாவட்டத்தின் வழியே பாயும் பெரும் நதிகளான பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய மூன்று ஆறுகளும் சங்கமமாகும் இடம் என்பதால் கூடலூர் என பெயர் பெற்றது. அதுவும் காலபோக்கில் மறுவி கடலூர் என்று மாறியதாகவும் கூறப்படுகின்றது.
  • பிரித்தானிய ஆட்சி காலத்திலிருந்து இது கடலூர் என்று அழைக்கப்பட்டது. கி.பி. 1746 ஆம் ஆண்டில் பிரித்தானியரின் தென்னிந்தியாவுக்கான தலைமையகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மக்கள்தொகை விவரம்

மக்கள்தொகை (மொ) ஆண்கள் பெண்கள்
26,05,914 13,11,697 12,94,217

Cuddalore District Map

Cuddalore District Map

சுற்றுலா இடங்கள்

பிச்சாவரம் (Cuddalore)

சிதம்பரத்துக்கு அருகே வங்கக் கடலை ஒட்டிய ஒரு பகுதி பிச்சாவரம். பித்தர்புரம் என்ற பெயரே, பிச்சாவரம் என்று மருவியது. இந்த உப்பங்கழிகள் உப்பு நீர்ப்பாசனம் மற்றும் பிச்சாவரம் சதுப்புநிலக்காடுகள் வெள்ளாற் மற்றும் கொள்ளிடம் ஆற்றின் அமைப்புகளால் நீர்ப்பாசனம், இழுபடகு மற்றும் படகு போன்ற நீர் விளையாட்டுகளுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகின்றன. பிச்சாவரம் வனப்பகுதி நீர்ப்பரப்பு மற்றும் உப்பங்கழும் பயணங்களுக்கு மட்டுமல்லாமல், மற்றொரு மிக அரிதான படகு சவாரிக்கு 400க்கும் மேற்பட்ட நீர் வழிகள் கொண்டு உள்ளன.

PICHAVARAM

தில்லை காளி கோயில்

தில்லை காளி கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் நகரில் அமைந்துள்ள ஒரு இந்து கோவில் ஆகும். 1229 மற்றும் 1278க்கு இடைப்பட்ட சோழ மன்னர் கோப்பெருஞ் சிங்கனால் கட்டப்பட்டது. காளி தேவி, சிவபெருமானிடம் நாட்டிய போட்டியில் தோற்றபிறகு தேவி இங்கு சென்று தவம் இருந்தார் என்று புராணக்கதை கூறுகிறது.

Thillai-kaali-temple

வீராணம் ஏரி (Cuddalore)

சோழர்களின் காலத்தில் கட்டப்பட்ட வீராணம் ஏரி 10 ஆம் நூற்றாண்டை சார்ந்தது. மேலும் இது வட தமிழகத்தில் 16-கிலோமீட்டர் (9.9 மைல்) நீளமான அணையாகும். இராஜாதித்த சோழன் ஓய்வு நேரத்தில், பல்லவ மன்னர்களுக்கு எதிரான போரில் திருமுனைப்பாடியில் முகாமிட்டிருந்த போது, ​​ அவரது வீரர்களுடன் சேர்ந்து கட்டப்பட்டது. “வீரநாராயணன்” என்ற பட்டம் பெற்ற தனது தந்தை முதலாம் பராந்தக சோழனின் நினைவாக அதற்கு அவர் பெயரிட்டார். இந்த ஏரி முதலில் வீரநாராயண மங்கலம் ஏரி என்று பெயரிடப்பட்டது, அப்போது சுமார் 20 கிமீ நீளமும் 7 கிமீ அகலமும் இருந்தது.

Viranam-Lake

நெய்வேலி மின் நிலையம்

நெய்வேலி லிக்னைட் கார்போரேசன் – தற்போது என். எல். சி. இந்தியா லிமிட்டேட் (NLCIL)என்று அழைக்கப்படுகின்றது. 1935 ஆம் ஆண்டில், கறுப்பு துகள்கள் இருப்பதை கண்டுபிடித்தது. பின்னர்  பகுப்பாய்வு செய்து, நெய்வேலி கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு கீழே லிக்னைட் இருப்புக்களை கண்டுபிடித்தது.

Coal mining

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் 1956 ஆம் ஆண்டு இந்திய அரசால் ஒரு கூட்டு நிறுவனமாக உருவானது. 1962 ஆம் ஆண்டில் லிங்கைட் சுரங்கத் திட்டம் தொடங்கப்பட்டது. முதல் வெப்ப மின் நிலையம் 1962 ஆம் ஆண்டில் யு.எஸ்.எஸ்.ஆற். உதவி உடன் தொடங்கப்பட்டது.

Neyveli Power Station

பாடலீஸ்வரர் கோவில்

தமிழ்நாட்டின் பழமையான கோவில்களில் ஒன்றான இத்தலம் கடலூரில திருப்பாதிரிபுலியூரில் பல்லவர்கள் மற்றும் மத்திய கால சோழர்கள் காலங்களில் இக்கோவில்கட்டப்பட்டது. சைவத் துறவியான அப்பர் இந்த ஆலயத்தில் தான் சைவத்தை ஏற்றுக்கொண்டதாக புராண செய்திகள் உள்ளன.

Pataleeswarar-Temple

கடலூர் துறைமுகம்

200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடலூர் துறைமுகம், வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்களின் தென் இந்தியாவின் முதல் தலைநகரமாக விளங்கியது. தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் இரண்டாவது பள்ளிகூடம் புனித டேவிட் பள்ளி கி.பி 1717 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

Cuddalore Port

விமான நிலையம் (Cuddalore)

கடலூரில் இருந்து 200 கி.மீ தொலைவில் சர்வதேச விமான நிலையம் சென்னை உள்ளது.
கடலூரிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் பாண்டிச்சேரி விமானநிலையம் உள்ளது. கடலூர் நகரத்திலிருந்து 45 கி.மீ., தொலைவில் உள்ள நெய்வேலியில், புதிய விமான நிலையம் விரைவில் தொடங்கி செயல்பட உள்ளது

இரயில் நிலையம் (Cuddalore)

சென்னை – விழுப்புரம் – கடலூர் – தஞ்சாவூர் – திருச்சி புகைவண்டி மார்க்கம் கடலூர் நகரம் மாவட்ட தலைமையகம் வழியாக இயங்குகிறது.

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் பட்டியல்

மேலும் தமிழக மாவட்டங்கள் பற்றி அறிய மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *