December 28: Measles Vaccination Camp in Southern Districts – Health Department Notification

டிசம்பர் 28: தென்மாவட்டங்களில் தட்டம்மை தடுப்பூசி முகாம் – சுகாதாரத் துறை அறிவிப்பு

தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு உட்பட்ட 15 வயது குழந்தைகள் மற்றும் சிறாருக்கு வரும் டிச.28-ம் (December 28) தேதி முதல் “தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி” செலுத்தப்படும் என்று பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Vaccination-Camp-in-Tamil-Nadu

 

December 28

பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், “பெரு மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு  15 வயதுக்குட் பட்டோருக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் பணி வரும் 28-ம் தேதி வியாழக்கிழமை முதல் தொடங்குகிறது.

மாவட்டங்களில் மொத்தம் 8 லட்சம் சிறார்களும், குழந்தைகளும் உள்ளனர். இதில் மழை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மட்டும் தடுப்பூசி வழங்கப்படும். மத்திய அரசு 10 லட்சம் தவணை தட்டம்மை தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. எனவே, போதிய எண்ணிக்கையில் அவை கையிருப்பில் உள்ளன. மேலும் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு உட்பட்ட 15 வயது குழந்தைகள் தவறாமல் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *