Deletion of Aadhaar from Birth Certificate Document – ​​UIDAI Notice to EPFO ​​!!

பிறப்பு சான்றுக்கான ஆவணத்தில் இருந்து ஆதார் நீக்கம் – EPFO-க்கு UIDAI அறிவிப்பு !!

Deletion of Aadhaar

ஆதார் அட்டை,  பிறப்பு சான்றாக  ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலில் இருந்து நீக்கும்படி ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (EPFO), இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உத்தரவு.

Aadhar

ஆதார் சட்டம் 2016

தனிநபரின் தனித்துவ அடையாளத்துக்காக ஆதார் பயன்படும்போது, பிறந்த தேதிக்கான சான்றாக அவை தகுதி பெறாது என்ற ஆதார் சட்டம் 2016-ன் வலியுறுத்தலின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆதாரை பிறந்த சான்றாகப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் பிறந்த தேதியில் திருத்தம் செய்வதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலிலிருந்து ஆதார் அகற்றப்படுகிறது. நாம் சம்பாதிக்கும் தொகையும், நிறுவனத்திடம் இருந்து குறிப்பிட்ட தொகையும் நமது PF கணக்கிற்கு மாதமாதம் சேரும். இபிஎப்ஓ பக்கத்தில் இருக்கும் பாஸ்புக் தளத்தில் நம்முடைய PF கணக்கை குறிப்பிட்டு நாம் நம்முடைய தொகை இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும். இந்த PF கணக்கில் சேரும் பணத்திற்கு வட்டியும் வழங்கப்படும்.

அவசர தேவைகள், மருத்துவ தேவைகளுக்கு இந்த பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். PF போக ரிட்டயர்மெண்ட் தொகையும் இதேபோல் வழங்கப்படும். ஆனால் அதை குறிப்பிட்ட வயதிற்கு பின்பே எடுக்க முடியும்.

பிறப்பு சான்றிதழ்

இந்நிலையில் தான் இனி ஆதார் அட்டையை பிறப்பு சான்றிதழ் ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று இபிஎப்ஓ அறிவித்துள்ளது. பிறப்பு ஆவணங்களுக்கு ஆதார் அட்டையை கொடுக்க கூடாது. அதை கொடுத்துள்ளவர்கள் உடனே பிறப்பு சான்றிதழை வழங்க வேண்டும். பிறப்பு சான்றிதழ் மட்டுமே பிறப்பு சான்றாக ஏற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று முதல் திருமணப் பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் முதன்மை ஆவணமாகச் செயல்படும். ஆதார் அட்டை, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் வழங்குதல் , அரசுப் பணிகளுக்கான நியமனம் ஆகிய சேவைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பயன்படுத்தப்படும். பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் மூலம் அமலுக்கு வருகிறது.

சமீபத்தில் ஆதார் சட்ட திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தில் மேற்கூறிய பணிகளுக்கு பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாற்றங்கள் செய்யப்பட்டன.

ஆதார் சட்ட திருத்தம் ,மசோதா நிறைவேற்றி வெற்றிபெற்ற நிலையில், இந்த  சட்டம் அமலுக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *