Demolition of Major Bridge of Capital city Chennai for Construction of Metro Rail

மெட்ரோ ரயில் கட்டுமான பணிக்காக தலைநகர் சென்னையின் முக்கிய பாலம் இடிப்பு

Demolition of Major Bridge

சென்னையில் இப்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயங்கி வரும் நிலையில் தற்போது கூடுதலாக 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அதன் காரணமாக சென்னை நகரில்  உள்ள முக்கிய மேம்பாலத்தை (Demolition of Major Bridge) இடிக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

Demolition of Major Bridge

சென்னை ராயப்பேட்டை – டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் உள்ள மேம்பாலத்தை இடிக்கும் பணியைச் சென்னை மெட்ரோ நிர்வாகம் ஆரம்பித்துள்ளது. இவை முழுமையாகப் பயன்பாட்டிற்கு வந்தால் விரிவான ஒரு மெட்ரோ சேவையைக் கொண்ட நகரமாகச் சென்னை மெட்ரோ மாறும். மேம்பாலத்தை இடிக்கும் பணி இரண்டு மாதங்களில் முடிவடையும். டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் கட்டப்படும் வரை இந்த பகுதியில் போக்குவரத்து மாற்றமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ நிலைய கட்டுமானம் முடிந்து மீண்டும் டிராபிக் பழையபடி வர 3 ஆண்டுகள் வரை
ஆகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ராயப்பேட்டையில் உள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதி நிலத்துக்கடியே அமையும். பூமிக்கு அடியில் அமையும் இந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மெட்ரோ ரயில் நிலையம் என்பது மாதவரம் முதல் மயிலாப்பூர் வழியாக சிப்காட் வரை இணைக்கும் 3ஆவது வழித்தடத்தில் வருகிறது. இந்த ஸ்டேஷன் மேம்பாலத்தின் அஸ்திவாரம் அமைந்துள்ள அதே இடத்தில் தான் அமைகிறது. இதன் காரணமாகவே ராயப்பேட்டை திசையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிக்கப்படுகிறது.

சென்னை மெட்ரோ Demolition of Major Bridge

  • ஓரிரு மாதங்களில் மேம்பாலத்தை இடிக்கும் பணிகள் முடிவடையும், நிலையத்தின்
    கட்டுமானம் முடியும் வரை போக்குவரத்து மாற்றம் தொடரும்.
  • மெட்ரோ நிலையம் நிலத்திற்கு அடியில் 15-18 மீட்டரில் அமையும் மெட்ரோ நிலையத்திற்கு இரண்டு நுழைவாயில்கள் இருக்கும்.
  • நிலத்திற்கு அடியில் அமைக்கும் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் முடிவடைய சுமார்
    மூன்று ஆண்டுகள் ஆகும்.
  • எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்த முழுப் பகுதியை முழுமையாக மூடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கவனமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • அடையாறு பகுதியில் அமைந்துள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதியும் மெட்ரோ கட்டு மானத்திற்காக இடிக்கப்பட உள்ளது.
  • மூன்றாவது கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி, (மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை இணைக்கும் மற்ற இரு வழித்தடங்களிலும் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
  • 2026 தொடக்கத்தில் இருந்து இந்த மெட்ரோ ரயில் படிப்படியாக இயங்க ஆரம்பிக்கும்
    எனத் தெரிகிறது.
  • இருப்பினும், இவை முழுமையாகச் செயல்பாட்டிற்கு வர 2028 வரை ஆகும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *