Digital Money Transactions Start Today in Both Mauritius and Sri Lanka

மொரிஷியஸ் மற்றும் இலங்கை இரு நாடுகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை இன்று தொடக்கம்

Digital Money Transactions

இந்தியாவில் UPI எனப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையானது (Digital Money Transactions) சாலையோர கடைகளில் இருந்து மால் வரை அனைத்து இடங்களிலும் உள்ளது. இந்தியாவின் UPI சேவைகள் உலகிற்கே முன்மாதிரியாக இருந்து வருகிறது. பல்வேறு நாடுகளும் UPI மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளை ஏற்க தொடங்கிய நிலையில் மொரிஷியசில் இன்று மதியம் நடைபெறும் விழாவில் UPI பரிவர்த்தனையானது அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

UPI Digital Money Transactions

UPI மூலம் பணம் செலுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும், மொரிஷியசும் இணைந்துள்ளது. இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் UPI பரிவர்த்தனை சேவைகள் இலங்கை மற்றும் மொரிஷியசில் இன்று மதியம் நடைபெறும் விழாவில் மொரிஷியசில் ரூபே கார்டு சேவையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *