Dindigul: About, History, Population, Behind the name, Places to visit (Tourism), Airport, Pin code

Dindigul: About, History, Population, Behind the name, Places to visit (Tourism), Airport, Pin code

திண்டுக்கல்

ஒரு காலத்தில் பல்வேறு ராஜ்ஜியங்கள் மற்றும் பேரரசுகளின் ஆட்சிகளைக் கண்ட ஒரு பண்டைய குடியேற்றம்  திண்டுக்கல் மாவட்டம் (Dindigul). இப்போது வளர்ந்து வரும் தொழில்கள் மற்றும் சுற்றுலா தலங்களுடன் ஒரு பரபரப்பான வணிக மாவட்டமாக உள்ளது. இம்மாவட்டம் பூட்டு மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு பெயர் பெற்றது. இந்த மாவட்டம் 6,266.64 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது.

Dindigul

வரலாறு

  • திண்டுக்கல் மாவட்டம் பலகாலம், மதுரை மாவட்டத்துடன் இணைந்திருந்தது. 1985-ஆம் ஆண்டில் மதுரை மாவட்டத்திலிருந்து, திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டதால் மதுரை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புகள் திண்டுக்கல் மாவட்டத்திற்கும் பொருந்தும்.
  • திண்டுக்கல் மாவட்டத்தில், பழனி, ஒட்டன்சத்திரம்,வேடசந்தூர் ஆகிய வட்டங்கள் கொங்கு நாட்டையும், திண்டுக்கல், கொடைக்கானல், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம் வட்டங்கள் பாண்டிய நாட்டையும் சேர்ந்தன.
  • திண்டுக்கல் தொன்று தொட்டு சேரர் மற்றும் பாண்டியர் ஆட்சியில் இருந்து வந்தது. குறிப்பாக விஜய நகர ஆட்சியில் தான் ஏற்றம் பெற்றது.
  • வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த ராணுவத்தளமாக முன்னேறியது. நாயக்க மன்னர்கள், ஆற்காடு நவாபுகள், மைசூர் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆகியோரால், இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது.
  • இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம்.
  • திண்டுக்கலில் உள்ள ஹைதர் அலியால் கட்டப்பட்ட கோட்டை, குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

மக்கள் தொகை விவரம்

மக்கள் தொகை (மொ) ஆண்கள் பெண்கள்
2159775 1080938 1078837

திண்டுக்கல் வரைபடம்

Dindigul district map

சுற்றுலாத் தலங்கள்

சொளந்தரராஜ பெருமாள் திருக்கோயில் (Dindigul)

சௌந்தர்ராஜ பெருமாள் கோவில் திண்டுக்கல்-கரூர் சாலையில் திண்டுக்கல்லிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. திருசௌந்தர்ராஜன் முக்கிய தெய்வமாக உள்ளார். இங்கு சக்கரத்தாழ்வாருக்கு தனியே கோயில் உள்ளது.

இங்குள்ள சிவன்-பார்வதி, ரதி-மன்மதன் முதலான சிற்பங்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுள்ள சிற்பங்களுக்கு இணையானவை. சித்திரை மாதம் (ஏப்ரல்-மே) முக்கிய விழா கொண்டாடப்படுகிறது. 12 தினங்கள் அபிசேக ஆராதனைகள் நடைபெறும்.

Soundararaja-perumal-temple Dindigul

அருள்மிகு தண்டாயுதபானி சுவாமி திருக்கோயில்

பழனி முருகன் கோவில், முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது. முருகனின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது.

Dhandayuthapani-Swamy-Temple

கொடைக்கானல்

தமிழ்நாட்டில் மதுரைக்கு அருகில் மேற்கு தொடர்ச்சி மற்றும் பழநி மலையின் ஒரு பகுதியாக உள்ளது. கொடைக்கானல் 7200 அடி கடல் மட்டத்திற்கு மேல் உயரம் கொண்டு மலைகளின் இளவரசி என எல்லோராலும் அழைக்கப்படுகிறது.

குளிர்ந்த பனிமூட்டத்துடன் கூடிய மேகங்கள் சூழ்ந்த உயர்ந்த அடர்ந்த மரங்களைக் கொண்ட வனப்பகுதியாக இருப்பதால் ஆண்டுமுழுவதும் மக்களை மிகவும் கவருகிறது. ஏரி, நீர்வீழ்ச்சி புல்வெளிகள் ஆகியவற்றில் நடப்பதும், மிதிவண்டியில் செல்வதும். குதிரைகளில் செல்வதும் மிகவும் மக்களைக் கவர்கிறது.

Kodaikkanal

சிறுமலை (Dindigul)

திண்டுக்கல், தமிழ்நாட்டில் சில வருடங்களுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட மாநகராட்சியாகும்.. திண்டுக்கல் பகுதியை சுற்றிலும் மலைகளும் குன்றுகளும் இருப்பினும் திண்டுக்கல் நத்தம் சாலையில் அமைந்துள்ள சிறுமலை தனி முக்கியத்துவம் பெற்று அமைந்துள்ளது.சிறுமலை 60000 ஏக்கர் பரப்பளவையும் உயர்ந்த மலைகளையும் கொண்டது.

கொடைக்கானல் மலையை விட அதிகமாக 18 கொண்டைஊசி வளைவுகளைக் கொண்டது. இங்கு கில்லாக் இன்டர்நேஷனல் பள்ளி உள்ளது. அடர்ந்த காடுகளும், நல்ல சீதோஷன நிலையையும் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது.

Sirumalai

இரயில்நிலையம் (Dindigul)

திண்டுக்கல் ரயில் நிலையித்திலிருந்து மதுரை, திருச்சி, கரூர், கோவை மார்க்கமாக ரயில்கள் செல்கின்றன

விமானநிலையம் (Dindigul)

திண்டுக்கலில் இருந்து 70 கி.மீ தொலைவில் மதுரை விமான நிலையம் உள்ளது.

திண்டுக்கல்  தபால் எண்

திண்டுக்கல் மாவட்ட தபால் எண் 624003

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் பட்டியல்

மேலும் தமிழக மாவட்டங்கள் பற்றி அறிய மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *