DMK Party: List of candidates for 21 constituencies will be released tomorrow!!

தி.மு.க. கட்சி: 21 தொகுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு!!

DMK Party:

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. (DMK Party) தலைமையிலான 21 தொகுதி களுக்கும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தயாரித்து நாளை மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் வெளியிடுகிறார்.

DMK Party

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க.,விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் என இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கி உள்ள தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, பெரம்பலூர், தஞ்சை, தேனி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. , சீனியர் எம்.பி.க்களுக்கும் புதுமுகங்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கும் என்று தெரியவந்துள்ளது.

21 தொகுதிகளுக்கும் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் பட்டியலையும்,  தேர்தல் அறிக்கையையும் நாளை வெளியிடுகிறார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கும் தி.மு.க அழைப்பு விடுத்துள்ளது. நாளை நண்பகல் 12 மணிக்கு இந்தக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என்று தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *