Do you Know What Happened in the Dressing Room When Dhoni Shared the result?

தோனி முடிவை பகிர்ந்த போது ட்ரெஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது தெரியுமா?

Dhoni:

CSK எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளம் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக தேர்வு செய்துள்ளார் தோனி (Dhoni)2019-ம் ஆண்டு CSK அணிக்காக அறிமுகமான ருதுராஜ் கெய்க்வாட் இதுவரை IPL தொடரில் 52 ஆட்டங்களில் விளையாடி உள்ளார்.

Dhoni

CSK அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் 17-வது சீசனை அணுகும் சென்னை அணியின் எதிர்காலத்தை கருதியே புதிய கேப்டன் நியமன முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய கேப்டனை நியமிக்க இதுவே சரியான நேரம் என தோனி கருதியதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். ருதுராஜை தேர்வு செய்தது தோனி தான். முடிவுகளை எடுக்கக் கூடியதில் அவர் சிறப்பானவர் என்று தெரிவித்தார். தோனியின் விலகல் முடிவு எதிர்பார்த்த ஒன்று என்ற போதும் ரசிகர்களுக்கு அது அதிர்ச்சி நிறைந்த ஒன்றாகவே அமைந்தது. கேப்டன் மாறப்போகும் விஷயத்தை வீரர்களிடம் தோனி சொன்னபோது CSK ட்ரெஸ்ஸிங் ரூமின் நிலைமை எவ்வாறு இருந்தது என்பதை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் ட்ரெஸ்ஸிங் வெளிப்படுத்தியுள்ளார்.

தோனி ருதுராஜை தேர்வு செய்த செய்தியை சொன்ன போது ட்ரெஸ்ஸிங் ரூமில் நிறைய பேர் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்காதவர்களே இல்லை, அனைவரும் நெகிழ்ந்தனர். ருதுராஜுக்கு வாழ்த்துகளும் வந்தன. கடந்த முறை தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது நாங்கள் தயாராக இல்லை. ஆனால், இப்போது முன்கூட்டியே முடிவு எடுத்துள்ளார் என ஸ்டீபன் ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *