Election Commissioner Arun Goyal Suddenly Resigned!!

தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் ராஜினாமா!!

Arun Goyal

தேர்தல் ஆணையர் அருண் கோயல் (Arun Goyal) பதவி காலம் நிறைவடையும் முன்பே திடீரென ராஜினமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 2025ல் தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பி உள்ளது.

Arun Goyal

தேர்தல் ஆணையத்தில் 3 பேர் தலைமை ஆணையர்கள் இருக்கும் இடத்தில் தலைமை தேர்தல் அதிகாரிகளாக இருவர் இருந்த நிலையில்  (ராஜிவ் குமார், அருண் கோயல்) தற்போது மேலும் ஒருவர் பதவி விலகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பி உள்ளது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு

2025ல் தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில் பதவி காலம் நிறைவடையும் முன்பே தனது பதவியை அருண் கோயல் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை நேரடியாக ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார். லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அருண் கோயல் ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பி உள்ளது.

அருண் கோயல் (Arun Goyal)

  • அருண் கோயல் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார்.
  • தேர்தல் ஆணையத்தில் தான் பிரச்சனை. தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் – அருண் கோயல் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது.
  • தேர்தல் தொடர்பான கோப்புகளில் இருவர் இடையே ஒரு மித்த கருத்துகள் இல்லை.
  • இன்னொரு தேர்தல் ஆணையர் பதவியும் காலியாக உள்ளதால், பல முக்கிய முடிவுகள் எடுக்க முடியாத நிலையில் தேர்தல் ஆணையம் திணறியது.
  • மாநில வாரியாக, அரசியல் கட்சிகளுடன் நடந்த கருத்துக் கேட்பு கூட்டங்களின் போதும், இருவருக்குமான கருத்து வேறுபாடு அதிகரித்தது. இதனால் தான் அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *