Elon Musk Announced a Free Subscription Service for X Users

எக்ஸ் பயனர்களுக்கு இலவச சந்தா சேவையை அறிவித்த எலான் மஸ்க்

Elon Musk

பிரபல சமூக வலைதளத்தை “X” என பெயர் மாற்றம் செய்த எலான் மஸ்க், (Elon Musk) X தளத்தில் கட்டண முறையில் வழங்கப்பட்டு வரும் எக்ஸ் பிரீமியம் சந்தாவை பயனர்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்திருக்கிறார் எலான் மஸ்க்.

Elon Musk

ட்விட்டர் தளத்தை வாங்கி அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏராளமான மாற்றங்களை கொண்டு வந்தவர் எலான் மஸ்க். பிரபல சமூக வலைதளத்தை எக்ஸ் என பெயர் மாற்றம் செய்ததும் அடங்கும்.  பெயர் மாற்றத்தோடு கட்டண முறையில் பயனர்களுக்கு விசேஷ அம்சங்களை வழங்கும் சந்தா முறையை எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் கொண்டு வந்த திட்டத்தை மற்ற முன்னணி சமூக வலைதள நிறுவனங்களும் பின்பற்ற தொடங்கின.

Elon-Musk

X தளத்தில் கட்டண முறையில் வழங்கப்பட்டு வரும் X பிரீமியம் சந்தாவை பயனர்களுக்கு இலவசமாக வழங்க எலான் மஸ்க் முடிவு செய்திருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது அதிகாரபூர்வ எக்ஸ் அக்கவுண்டில் வெளியிட்டுள்ளார். X தளத்தில் 2500-க்கும் அதிக வெரிஃபைடு சந்தாதாரர்களை ஃபாலோவர்களாக கொண்டிருக்கும் அக்கவுண்ட்களுக்கு பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படும். 5000-க்கும் அதிக வெரிஃபைடு சந்தாதாரர்களை ஃபாலோவர்களாக கொண்ட அக்கவுண்ட்களுக்கு பிரீமியம் பிளஸ் சந்தா இலவசமாக வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *