Equal Pay for Equal Work – Secondary Teachers Strike Continues for 2nd Day

சம வேலைக்கு சம ஊதியம் – இடைநிலை ஆசிரியர்கள் 2வது நாளாக தொடர் போராட்டம்

Equal Pay for Equal Work

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஓர் ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர் களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டு, ஒரு நாள் வித்தியாசத்தில் ரூ.3,170 குறைந்து உள்ளது. இதன் மூலம் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சம வேலைக்கு சம ஊதியம் (Equal Pay for Equal Work) வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து 2-வது நாளாக டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Equal-Pay-for-Equal-Work

தமிழக அரசு முரண்பாட்டைக் களைந்து “சம வேலைக்கு சம ஊதியம்” வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னையில் கடந்த செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்தப்பட்டதை  தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை 3 மாதங்களில் அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்று அறிவித்தது. கால தாமதம் ஏற்படுவதால் இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் போராட்டத்தை முன்னெடுத்து சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நேற்று முன்தினம் முதல் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் 350 ஆசிரியைகள் உட்பட 750 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் தலைமையில் ஏராளமான ஆசிரியர்கள் நேற்றும் டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற நிலையில்  அவர்களை போலீஸார் தடுத்து கைது செய்தனர். நேற்று 400 ஆசிரியைகள் உட்பட 900 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *