Filing of Nominations in Tamil Nadu is Over Today

தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு

Filing of Nominations

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் இன்றுடன் வேட்பு மனு தாக்கல் (Filing of Nominations ) நிறைவடைகிறது.

Filing of Nominations

வேட்பு மனு தாக்கல்

  • மத்திய சென்னை தொகுதியில் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி சி.எஸ். கர்ணன் உள்பட 9 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
  • தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறன் இன்று மனு தாக்கல் செய்கிறார்.
  • தென்சென்னை தொகுதியில் நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட 9 பேர் மனு தாக்கல் செய்தனர்.
  • இந்த தொகுதியில் நேற்று வரை 22 பேர் மனு அளித்துள்ளனர்.
  • கடலூர் தொகுதியில் நேற்று காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் உள்பட 6 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
  • விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம் உள்பட 3 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
  • கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளர் சதீஷ்குமார், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஸ்டீபன்ராஜ் ஆகிய 2 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
  • வேலூர் தொகுதியில் நேற்று ஒரே நாளில் 12 பேர் மனு தாக்கல் செய்தனர்.
  • பா.ஜனதா சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் களம் காண்கிறார். 

700 வேட்புமனு தாக்கல்

  • தமிழகம் முழுவதும் நேற்று வரை சுமார் 700 பேர் மனு தாக்கல் செய்ததில், 100-க்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர்.
  • வேட்பு மனு தாக்கல் செய்ய புதன்கிழமை கடைசி நாள் ஆகும்.
  • கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய விரும்புபவர்கள் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நேரமான மதியம் 3 மணிக்குள் டோக்கன் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
  • டோக்கன் பெற்றவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நேரம் முடிவடைந்த பின்னரும் மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது.

30-ந்தேதி மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளதைத் தொடர்ந்து அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதன்பின்பு, சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *