Free Helpline Number for School Students: 14417 Announced by Tamil Nadu Govt

பள்ளி மாணவர்களுக்கான இலவச உதவி எண்: 14417 அறிவித்த தமிழக அரசு

Free Helpline Number

பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கற்றல் செயல்பாடுகளில் மட்டுமின்றி பல்வேறு விதமான சமூகம் மற்றும் குடும்ப பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றன. இவற்றை யாரிடமாவது சொல்லி தீர்வு காண மூன்றாம் நபரை அணுகி பல்வேறு பிரச்னைக்கு உள்ளாகின்றனர். பெற்றோர்கள், ஆசிரியர்களை தாண்டி யாராவது ஒரு நபரை தேடும் எண்ணம் பலரிடமும் காணப்படுகிறது. இதற்காக தான் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இலவச உதவி எண்ணை அறிமுகம் (Free Helpline Number) செய்திருக்கிறது.

Education-toll-free-number

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை 14417 என்ற இலவச உதவி எண்ணை அறிமுகம் செய்து  24 மணி நேரமும் தொடர்பு கொண்டு மாணவர்கள் தங்கள் குறைகளை சொல்லலாம். விரைவில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 12 ஆகிய வகுப்பு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உதவி மைய ஆலோசகர்களின் எண்ணிக்கை 20ல் இருந்து 75ஆக உயர்த்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் கல்வி ரீதியிலான சிக்கல்கள், மன ரீதியிலான சிக்கல்கள், பாலியல் தொந்தரவு, பிற பிரச்சினைகள் போன்றவற்றை பகிர்ந்து கொண்டு தீர்வு காண முயற்சிக்கலாம். கொடுக்கப்படும் புகாருக்கு கால நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாலியல் தொந்தரவு அல்லது பிரச்சினைகளுக்கு 5 முதல் 12 மணி நேரத்தில் தீர்வு காணப்படும். பொதுத்தேர்வு அல்லது பள்ளி சார்ந்த குறைகளுக்கு 24 முதல் 48 மணி நேரத்திற்குள் தீர்வு காண்பர் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாத இறுதியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வும், ஏப்ரலில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். பல்வேறு தரப்பில் இருந்து வரும் அழுத்தங்களால் பெரும் தவிப்பிற்கு ஆளாகின்றனர். இவர்கள் 14417 என்ற எண்ணை அழைத்து உரிய ஆலோசனை பெறுமாறு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *