French President Macron Visits India on the Occasion of Republic Day

பிரான்ஸ் அதிபர் மேக்ரான்  குடியரசு தின விழாவை முன்னிட்டு இந்தியா வருகை

French President Macron

டெல்லியில் நாளை (வெள்ளிக்கிழமை)  நடைபெறும் குடியரசு தின விழாவில் டெல்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்படும்.  கோலாகலமாக நடைபெற உள்ள குடியரசு தின விழாவை முன்னிட்டு  ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பிரான்ஸ் அதிபர் மேக்ரான் (French President Macron) சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

French-President-Macron

2 நாள் பயணமாக இந்தியா வரும் பிரான்ஸ் அதிபர் விமானம் மூலம் இன்று மதியம் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு வருகிறார். மேக்ரான், அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடியை சந்திக்கிறார். முன்னதாக அவர் மோடியுடன் சாலை பேரணியிலும் பங்கேற்கிறார்.

மேலும் ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டை, ஜந்தர் மந்தர் மற்றும் ஹாவா மகால் ஆகிய இடங்களுக்கு மேக்ரான் செல்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இரவு 8.50 மணியளவில் டெல்லிக்கு புறப்பட்டு செல்லும் மேக்ரான் நாளை டெல்லி கடைமை பாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *