Google has Announced that it Will End its Pay App Service in the US in June

கூகுள் நிறுவனம் அமெரிக்காவில் தன் பே ஆப் சேவையை ஜூன் மாதம் நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது

Google

கூகுள் நிறுவனத்தின் Pay App செயலி UPI மூலம் பரிவர்த்தனைகள் நடைபெறுவதால் பயனாளர்களின் செல்போன் எண் இருந்தாலே அவர்களுக்கு பணம் அனுப்பவும், பெறவும் முடிகிறது. இந்தியாவிலும் இந்த செயலி இல்லாத செல்போன்களே இல்லை என்னும் அளவுக்கு இதன் பயன்பாடு உள்ளது. டீக்கடைகள் தொடங்கி மிகப்பெரிய மால்கள் வரை அனைத்து இடங்களிலும் Google Pay பயன்பாடு உள்ள நிலையில், அமெரிக்கர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு அறிவிப்பை கூகுள் பே வெளியிட்டுள்ளது. அதாவது, ஜூன் 4-ம் தேதி முதல் அமெரிக்காவில் இந்த வசதி நிறுத்தப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

google-pay

அமெரிக்காவில் மட்டும் தான் இந்த சேவை நிறுத்தப்படுவதாகவும் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் வழக்கம் போல் அந்த சேவை பயன்பாட்டில் இருக்கும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. கூகுள் Pay செயலி சேவை நிறுத்தப்பட்டாலும் அதில் உள்ள வசதிகளை கூகுள் Wallet பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூகுள் Pay  ஆப்பை விட Google Wallet பயன்பாடு அமெரிக்காவில் மிக அதிகமாக இருப்பதால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *