Google has Introduced a New “Circle to Search” Feature

கூகுள் நிறுவனம் புதிய “சர்க்கிள் டு சர்ச்” வசதி அறிமுகம்

Circle to Search

கூகுள் நிறுவனம் ஜனவரி 17ல் சேம்சங் நிறுவனம் நடத்திய நிகழ்வில் தனது புதிய வசதியான சர்க்கிள் டு சர்ச் (Circle to search)  அறிமுகம் செய்துள்ளது. புதிய செய்யறிவு தொழில்நுட்ப வசதியை சாம்சங் மற்றும் கூகுள் இணைந்து உருவாக்கியுள்ளது.

Google Inc

சர்க்கிள் டு சர்ச் வசதி மூலம், கூகுள் தளம் மற்றும் வேறு எந்த செயலியிலோ உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் ஒரு வட்டம் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும். உங்கள் செல்போனில் ஒரு புகைப்படத்தை நீங்கள் பார்த்துக் கொண்டுள்ளீர்கள், அதில் உள்ள ஒன்றை பற்றிய தகவல் பெற விரும்பினால்  அதன் மேல் நீங்கள் ஒரு வட்டம் போட்டால் போதும். கூகுள் உங்களுக்கு சிறிய பாப்-அப் (Pop-up) மூலம் அந்த புத்தகம் தொடர்பான தகவல்களை அளிக்கிறது. தனியாக கூகுளுக்கு சென்று தேடி பின்னர் மீண்டும் பழைய வேலையைத் தொடர வேண்டிய அவசியம் இனி இல்லை என கூகுள் தெரிவிக்கிறது. இந்த வசதியை எல்லா செயலிகளிலும் பயன் படுத்தலாம். செல்போனின் ஹோம் பட்டனை அழுத்திப் பிடித்தால், கூகுள் அசிஸ்டன்ட் (Google assistant)-க்கு பதிலாக இந்த வசதி செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது சேம்சங்கின் புதிய காலக்ஸி எஸ்24, கூகுளின் பிக்சல் 8 மற்றும் பிக்சல்  8 ப்ரோ ஆகிய செல்போன்களில் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *