Google Layoffs Will Continue; Chief Executive Officer Sundar Pichai Announcement!

கூகுள் நிறுவனத்தின் பணி நீக்கம் தொடரும்; தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவிப்பு!

Google Layoffs

கூகுள் நிறுவனம் (Google Layoffs) தனது ஊழியர்களை சமீபத்தில் பணியில் இருந்து நீக்கியதை தொடர்ந்து, நிறுவனத்தின் நடவடிக்கைகளை எளிமையாக்கும் வகையில் வரும் மாதங்களில் மேலும் பணி நீக்க நடவடிக்கைகள் தொடரும் என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

CEO-Sundar-Pichai Google Layoffs

செயற்கை நுண்ணறிவு

  • அமெரிக்காவும் ஐரோப்பாவும் பொருளாதாரத்தில் மறுமலர்ச்சி என்ற நம்பிக்கையுடன் இந்த புத்தாண்டை தொடங்கியுள்ளன.
  • பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முதலீடு செய்வதன் தொடர்ச்சியாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையுடன் தொடங்கியுள்ளன.
  • கூகுள் மற்றும் அமேசான் போன்ற மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தன.
  • மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் காரணமாக அடுத்த சில மாதங்களில் மேலும் பணிநீக்கம் இருக்கும் என்று அறிவித்துள்ளன.
  • Layoffs.fyi. இணையதளத்தின் படி இந்தத் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஜனவரி மாதத்தில் இதுவரை 7,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

சுந்தர் பிச்சை Google Layoffs

கூகுள் நிறுவனத்தின் பணிநீக்க நடவடிக்கை குறித்து சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்த பணிநீக்க நடவடிக்கைகள் நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு துறைகளின் அடுக்குகளை நீக்குவதாக இருக்கும். கடந்த ஆண்டின் அளவில் பணி நீக்கம் இருக்காது, அதேபோல் எல்லா குழுக்களிலும் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.  கூகுள்  பணிநீக்க நடவடிக்கையில் கூகுள் நெஸ்ட், பிக்ஸல், ஃபிட்பிட், விளம்பர விற்பனை பிரிவு போன்றவை அதிகமாக பாதிக்கப்பட்டன.

6 % ஊழியர்கள் பணி நீக்கம்

  • 2023 செப்டம்பரில் உலக அளவில் அந்நிறுவனத்தில் 1,82,381 பேர் இருந்தனர்.
  • ஜனவரி மாதம் கூகுள் நிறுவனம் சர்வதேச அளவில் உள்ள தனது ஊழியர்களில் 12,000 பேர் (6 % பேரை) பணி நீக்கம் செய்தது.
  • கூகுள் வரலாற்றிலேயே இந்த பணிநீக்க நடவடிக்கை மிகப் பெரியது என்றாலும் நிறுவனத்துக்கு இது மிகவும் இன்றியமையாதது என்று சுந்தர் பிச்சை முன்பு தெரிவித்திருந்தார்.
  • நிறுவனத்தின் ஊழியர்களின் கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கையாக இந்த பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக இருந்தாலும் இந்த நடவடிக்கையின் போது ஃபிட்பிட் இணை நிறுவனர்களான ஜேம்ஸ் பார்க் மற்றும் எரிக் ஃப்ரைட்மானும் நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *